» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)
திருநெல்வேலி மாவட்டம், தென்னிமலையைச் சேர்ந்த கோடீஸ்வரன் (38) என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு களக்காடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். மேலும் இந்த பாலியல் தாக்குதலில் அந்த சிறுமியின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.
 
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளான கோடீஸ்வரன்(38) மற்றும் மல்காமால்(35) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, இன்று (9.9.2025) அவர்கள் 2 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் தீரப்பு வழங்கினார்.
 இந்த வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்சமயம் தூத்துக்குடி மாவட்டம்), சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த நாங்குநேரி உட்கோட்ட டி.எஸ்.பி. தர்ஷிகா நடராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
 திருநெல்வேலி காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 17 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 ேபருக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
 திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




