» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலி பத்திர பதிவுக்கு உதவியதாக சார் பதிவாளர் சஸ்பெண்ட்: பத்திரப்பதிவுத் துறை உத்தரவு
புதன் 10, செப்டம்பர் 2025 12:51:46 PM (IST)
நெல்லையில், போலியான முறையில் பத்திரப் பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக  சார் பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 
 
திருநெல்வேலி என். ஜி. ஓ., காலனியை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான பூர்வீக நிலம் ஆணையர் குளம் பகுதியில் 21 சென்ட் உள்ளது. இதன் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேலாகும். கடந்த ஜூன் மாதம், அந்நிலத்தை கிருஷ்ணாபுரம் சேர்ந்த ராஜவேல் என்பவர், போலி ஆவணங்கள் தயாரித்து மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது ஜவஹர் அலிக்கு விற்றதாக சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்தார்.சம்பவம் குறித்து சரவணன் புகாரை தொடர்ந்து, பெருமாள்புரம் போலீசார் ராஜவேல், முகமது ஜவஹர் அலி, உடந்தையாக இருந்த முத்துப்பாண்டி, ஆனந்தவேல் மற்றும் மேலப்பாளையம் சார்பதிவாளர் காட்டுராஜா ஆகிய 5 பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இதில் முத்துப்பாண்டி, முகமது ஜவஹர் அலி கைது செய்யப்பட்டனர்.
 சார்பதிவாளர் காட்டு ராஜா, என். ஜி. ஓ., காலனி பகுதியில் அரசின் பல்வேறு ஓ.எஸ்.ஆர். நிலங்களை போலியான முறையில் பத்திரப் பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவர் மேலப்பாளையத்திலிருந்து ஆடிட் பிரிவில் சாதாரணப் பொறுப்புக்கு மாற்றப்பட்டார். 
 இதனிடையே இப்பிரச்னையில் நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இதுபோல வங்கி முடக்கிய சொத்துக்களை போலி பத்திரப்பதிவு செய்து தந்தது தொடர்பாக கடலுார் பொறுப்பு சார் பதிவாளர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




