» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி முற்றிலும் சீரழிந்துள்ளது: நயினார் நாகேந்திரன் அறிக்கை
புதன் 10, செப்டம்பர் 2025 3:50:08 PM (IST)
திமுக அரசின் அலட்சியத்தால் தாமிரபரணி ஆறு இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் கண்டதோர் வையை, பொருநை நதி” என மகாகவி பாரதியார் பாட்டெடுத்த தாமிரபரணி ஆறு, திமுக அரசின் அலட்சியத்தால் இன்று முற்றிலுமாக சீரழிந்து போயுள்ளது. நெல்லையின் வற்றாத ஜீவநதியாகவும், சுற்றியுள்ள 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையின் உயிர்நாடியாகவும் பெருக்கெடுத்த தாமிரபரணி ஆற்றில், கழிவுநீரைக் கலக்கவிட்டு, அதன் தன்மையையும் மக்களின் அடிப்படைத் தேவையையும் முற்றிலுமாக அழித்துவிட்டது ஆளும் அரசு.தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளைத் தூர்வாருவது, அவற்றின் கரைகளைப் பலப்படுத்துவது, கால்வாய்களை மறுசீரமைப்பது, நீர்நிலைகளில் கலக்கப்படும் கழிவுநீரை சுத்திகரிப்பது உள்ளிட்ட நீர் மேலாண்மையின் அடிப்படை வேலைகளைக் கூட செய்ய முடியாத திமுக அரசு, எதற்காக நீர்வளத்துறை என்ற தனித்துறையை உருவாக்கியது? அனைத்து உயிர்களின் வாழ்வாதாரமான நீராதாரத்தைத் திமுக அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
தென் தமிழக மக்களின் அடிப்படைத் தேவை இப்படி அந்தரத்தில் ஊசலாடுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எந்தக் கவலையுமில்லையா? ஒருவேளை, தண்ணீருக்காக தென் மாவட்ட மக்களைத் திக்குமுக்காட வைப்பதும் திராவிட மாடல் கொள்கைகளில் ஒன்றாக இருக்குமோ? திமுக ஆட்சியில் தெற்கு தேய்கிறது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)


