» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியர் ஆய்வு
புதன் 10, செப்டம்பர் 2025 4:50:46 PM (IST)

மேலப்பாளைத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வையிட்டு, ஆய்வு செய்தார். 
 திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் கே.எஸ்.ஆர் மாநகராட்சி மண்டபத்தில் இன்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில்” பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பார்வையிட்டு ஆய்வு செய்து, மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த பயனாளிக்கு உடனடியாக பெயர் மாற்றம் செய்து அதற்கான ஆணையினை வழங்கினார்கள்.
 தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 3768 முகாம்கள் கிராமப்புறங்களிலுள்ள 6232 முகாம்கள் ஆக மொத்தம் 10,000 முகாம்கள் மூலம் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, கிராமப்புறங்களில் 15 துறைகள் மூலம் 46 சேவைகளும், நகர் பகுதிகளில் 13 துறைகள் மூலம் 43 சேவைகள் பொதுமக்களுக்கு கிடைப்பதற்காக இத்திட்டத்தினை சிதம்பரத்தில் துவக்கி வைத்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தில் மூலம் பொதுமக்களால் வழங்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு காணப்படும்.
 அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டு இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் 55 வார்டுகளுக்கு 38 முகாம்களும், களக்காடு, விக்கிரமசிங்கபுரம், அம்பாசமுத்திரம் ஆகிய 3 நகராட்சி பகுதிகளில் 69 வார்டுகளுக்கு 29 முகாம்களும், 17 பேரூராட்சிகளை சார்ந்த 273 வார்டுகளுக்கு 34 முகாம்களும், ஊராட்சி பகுதிகளுக்கு 154 முகாம்களும் என 255 முகாம்கள் 07.10.2025 வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில், மருத்துவத்துறையின் மூலம் சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 இன்றையதினம், மேலப்பாளையம் மண்டலம் வார்டு எண்.31, 45, 46 பகுதிகளுக்கு கே.எஸ்ஆர். மாநகராட்சி மண்டபத்திலும், களக்காடு நகராட்சி வார்டு எண்.19, 21,22 பகுதிகளுக்கு வியாசராஜபுரம் அருணா மஹாலிலும், சங்கர்நகர் பேரூராட்சி வார்டு எண்.1-6 பகுதிகளுக்கு சங்கர்நகர் பேரூராட்சி அலுவலகத்திலும், மணிமுத்தாறு பேரூராட்சி வார்டு எண்.9-15 பகுதிகளுக்கு மணிமுத்தாறு பேரூராட்சி அலுவலகத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் களக்குடி, எட்டாங்குளம் பகுதிகளுக்கு களக்குடி யாதவர் சமுதாய நலக்கூடத்திலும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் கரைச்சுத்துப்புதூர் பகுதிகளுக்கு கரைச்சுத்துப்புதூர் சமுதாய நலக்கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. 
 இம்முகாம்களில் உடனடியாக தீர்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயர் மாற்றம் செய்தல், பெயர் சேர்த்தல், மின்விநியோகம் பெயர் மாற்றம் போன்ற உடனடியாக தீர்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீர்வு வழங்கப்பட்டு பலர் சேவைகள் பெற்று வருகின்றனர். மேலும், உடனடி தீர்வு காணாத மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 தொடர்ந்து, நாளை (11.09.2025) தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண்.30 பகுதிகளுக்கு தச்சநல்லூர் மண்டல அலுவலகத்திலும், திருக்குறுங்குடி பேரூராட்சி வார்டு எண்.8-15 பகுதிகளுக்கு திருக்குறுங்குடி சரஸ்வதி திருமண மண்டபத்திலும், மானூர் ஊராட்சி ஒன்றியம் தெற்குப்பட்டி, குறிச்சிகுளம் பகதிகளுக்கு குறிச்சிகுளம் பள்ளிவாசல் சமுதாய நலக்கூடத்திலும், பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் பாப்பாக்குடி பகுதிகளுக்கு சேனைத்தலைவர் திருமண மண்டபத்திலும், இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் முதுமொத்தான்மொழி பகுதிகளுக்கு முதுமொத்தான்மொழி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வள்ளியூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு கருங்குளம் பகுதிகளுக்கு தெற்கு கருங்குளம் சமுதாய நலக்கூடத்திலும் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




