» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகார்: எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வியாழன் 11, செப்டம்பர் 2025 12:31:55 PM (IST)
திருநெல்வேலியில் திருடப்பட்டு மீட்கப்பட்ட ஆட்டோவை ஒப்படைக்க லஞ்சம் கேட்டதாக புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி தச்சநல்லுார் தேனீர்குளத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவர் சொந்தமாக ஓட்டி வந்த ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். சில தினங்களுக்கு முன் காணாமல் போனது. இது குறித்து தச்சநல்லுார் போலீசில் புகார் செய்தார். அதே பகுதியைச் சேர்ந்த சங்கரன் என்பவர் ஆட்டோவை திருடிச் சென்றுள்ளார். மானுார் பகுதியில் சென்றபோது விபத்துக்குள்ளானார்.
ஆட்டோவை மீட்ட மானுார் போலீசார், பேச்சிமுத்து தச்சநல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதை அறிந்து அங்கு ஒப்படைத்தனர். ஆட்டோவை பேச்சிமுத்துவிடம் ஒப்படைக்கும் பொறுப்பு எஸ்.ஐ.,ரமேஷ் மணிகண்டனிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் ரூ.5 ஆயிரம் கேட்டு தாமதப்படுத்தி உள்ளார். இது குறித்து பேச்சிமுத்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணியிடம் புகார் தெரிவித்தார். துணை கமிஷனர் பிரசண்ணகுமார் விசாரித்தார். இதனையடுத்து எஸ்.ஐ. ரமேஷ் மணிகண்டன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

பொருநை அருங்காட்சியகத்திற்கு பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் சுகுமார் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 10:38:30 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட நாளை முதல் அனுமதி: கட்டணம் நிர்ணயம்!
திங்கள் 22, டிசம்பர் 2025 8:01:26 PM (IST)

