» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு!

வியாழன் 11, செப்டம்பர் 2025 3:46:38 PM (IST)



திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினா.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (10.09.2025) மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட /மண்டல அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி (12-19 வயது வரை), கல்லூரி (15-35 வயது), பொதுமக்கள், (15-35 வயது) அரசு ஊழியர்கள் (வயது வரம்பு இல்லை) மற்றும் மாற்றுத்திறனாளிகள் (வயது வரம்பு இல்லை) என வெவ்வேறு பிரிவுகளில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத்தலைவர் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், தலைமையில் 26.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். தொடர்ந்து, தடகளம், செஸ், கூடைப்பந்து, கபாடி, கால்பந்து, வாலிபால், சிலம்பம், இறகுபந்து, டேபிள் டென்னிஸ் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி அளவில் கையுந்து பந்து, கூடைப்பந்து, வளைகோல் பந்து ஆகிய பிரிவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மரு.இரா.சுகுமார், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.

மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு தொகை ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000 மூன்றாம் பரிசு தொகை ரூ.1000 அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்நிகழ்வில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, பயிற்றுனர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory