» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் : 13 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு!
திங்கள் 15, செப்டம்பர் 2025 8:35:27 PM (IST)
நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களுக்கிடையே கோஷ்டி மோதல் எதிரொலியாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக 13 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை பேட்டையை அடுத்த சுத்தமல்லியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி வளாகத்தில் மாணவர்கள் இரு தரப்பினராக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்குச் சென்ற போலீசார் மேற்கொண்டு பிரச்சனைகள் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோஷ்டி முதலில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு தரப்பை சேர்ந்த 13 மாணவர்களை கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். மேலும் இன்று மாணவர்களுக்கு பரிச்சை என்பதால் அறிவுரை வழங்கி அதிகாரிகள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)


