» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:23:31 AM (IST)
அம்பையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (68). பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலைசெய்து வந்தார். இவர் கடந்த 2024-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நீதிபதி சுரேஷ்குமார் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் உஷா ஆஜரானார். நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரை 17 போக்சோ வழக்குகளில் 18 குற்றவாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ஒருவருக்கு 25 ஆண்டுகளும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் பெற்றுத்தரப்பட்டுள்ளது என மாவட்ட எஸ்பி சிலம்பரசன் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்: ஆட்சியர் இரா.சுகுமார் அறிவிப்பு
புதன் 17, டிசம்பர் 2025 11:09:51 AM (IST)


