» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முத்தூர் ஊராட்சியில் புதிய தொழில் பேட்டை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:25:13 PM (IST)

பாளையங்கோட்டை முத்தூர் ஊராட்சியில் சிட்கோ புதிய தொழில் பேட்டையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் ஊராட்சியில் சிட்கோ புதிய தொழில் பேட்டையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, சிட்கோ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்பித்தார்கள்.
பாளையங்கோட்டை வட்டம், முத்தூர் கிராமத்தில் 33.35 ஏக்கர் நிலத்தில் தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் புதிய தொழிற்பேட்டையாக உருவாக்கம் செய்திட மேற்படி நிலத்திற்கு நிலமதிப்பு செலுத்தப்பட்டு 05.10.2023 அன்று சிட்கோ மூலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் சுமார் 1400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேற்கண்ட தொழிற்பேட்டையில் மொத்தம் 99 தொழில்மனைகள் ரூ.958 இலட்சம் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக 24.37 ஏக்கரில், 1.91 கோடி மதிப்பீட்டில், 67 தொழில்மனைகள் மேம்படுத்தப்பட்டு தொழில் முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் தருவாயில் உள்ளது. சிட்கோ தொழிற்பேட்டை இப்பகுதியில் அமைவதன் மூலம் இப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், தொழில்முனைவோர்களாக மாறுவதற்கான வாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சிட்கோ கிளை மேலாளர் கலாவதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் சந்திரன், முத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுடலைகண்ணு, முக்கிய பிரமுகர் போர்வெல் கணேசன், சுபாஷ் தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
செவ்வாய் 4, நவம்பர் 2025 8:52:23 PM (IST)

காதலுக்கு எதிர்ப்பு: பெண்ணின் தந்தையை அரிவாளால் வெட்டி வீட்டை சூறையாடிய கும்பல்!
ஞாயிறு 2, நவம்பர் 2025 10:35:04 AM (IST)

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ காலனியில் விதைப்பந்து வித்தகர்களுக்கு விருதுகள்
சனி 1, நவம்பர் 2025 9:24:57 PM (IST)

மணிமுத்தாறு பகுதியில் ரூ.3.59 கோடியில் சாகச சுற்றுலா தல மேம்பாடு பணிகள் துவக்கம்!
சனி 1, நவம்பர் 2025 5:53:26 PM (IST)

அம்பாசமுத்திரம் புறவழிச்சாலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சனி 1, நவம்பர் 2025 3:07:47 PM (IST)

திருநெல்வேலியில் நவ.3ம் தேதி மின்தடை!
சனி 1, நவம்பர் 2025 11:48:26 AM (IST)




