» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் சர்ச்சை பதிவு: வாலிபர் கைது!
புதன் 24, செப்டம்பர் 2025 3:43:48 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் முகநூலில் வசனங்கள் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம், வடக்கு கும்பிளம்பாடு, நடுத் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் தங்கபாண்டி (35) என்பவர் சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இரு தரப்பினருக்கு இடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளனர்.
இதுகுறித்து ராதாபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்ததையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சகாயராபின் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, சமூக வலைதளமான முகநூல் பக்கத்தில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையைத் தூண்டும் விதமாக வசனங்கள் வைத்த தங்கபாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்களை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இதுபோன்று பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரப்புபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தென்காசியில் அரசு வழக்கறிஞர் வெட்டிக் கொலை : மர்ம நபர்கள் வெறிச்செயல்
புதன் 3, டிசம்பர் 2025 4:34:24 PM (IST)

ஓட்டல் உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லை அருகே பரபரப்பு!!
புதன் 3, டிசம்பர் 2025 8:24:25 AM (IST)

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி அதிகாரி கைது|
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:32:36 PM (IST)

3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:04:20 PM (IST)

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)

புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு: சபாநாயகரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:30:28 AM (IST)


