» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் ரூ.3.24 கோடி மதிப்பில் நலதிட்ட உதவிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
புதன் 24, செப்டம்பர் 2025 4:31:16 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.3.24 கோடி மதிப்பில் 748 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூர் எஸ்.எல்.எம்.மஹால் மற்றும் மானூர் வட்டம், தேவர்குளம் அடைக்கலாப்புரம் விளக்கு வீரபாண்டியன் மஹாலில் இன்று (24.09.2025) வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தலைமையில், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சட்டமன்றப் பேரவைத்தலைவர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் முன்னிலையில் ரூ.36.76 கோடி மதிப்பில் 1985 பயனாளிகளுக்கு பட்டாக்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
சேரன்மகாதேவி வட்டம், வீரவநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.33.21 கோடி மதிப்பில் 1174 நபர்களுக்கு பட்டாக்களும், வேளாண்மைத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான விசைதெளிப்பான் ஒரு பயனாளிக்கும், ஆவின் சார்பில் உடையாம்புளி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் பால் பரிசோதனை கருவிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.30 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் 7 பயனாளிகளுக்கு உழவர் அடையாள அட்டைகளும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என 1237 பயனாளிகளுக்கு ரூ.33.52 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
தொடர்ந்து, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.19 இலட்சம் மதிப்பில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வதற்கும், இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் தேவையான படகு, லைப்ஜாக்கெட், சோலார் விளக்கு, வாக்கிடாக்கி, மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட 30 வகையான மீட்பு இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் ஊர்க்காடு பகுதியில் நீண்டநாட்களாக வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதன்படி, முதல்கட்டமாக 1000 நபர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக இன்று ஊர்க்காடு பகுதியிலுள்ள 468 நபர்களுக்கும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அம்பாசமுத்திரம் வட்டத்தில் 772 நபர்களுக்கும், சேரன்மகாதேவி வட்டத்தில் 402 நபர்கள் என மொத்தம் 1174 நபர்களுக்கு இன்று பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. பட்டா மட்டுமல்லாமல் அவர்களுக்கு தேவையான வீடுகள் கட்டித் தருவதற்காக இந்த ஆண்டு 1300 நபர்களுக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத் திட்டங்களான தாயுமானவர் திட்டம், நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம், உங்களுடன் ஸ்டாலின் திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், அன்புக்கரங்கள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முத்தான திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது.
2 கோடி மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 35 இலட்சம் மகளிர்களிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற புதிதாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டுமென அறிவித்துள்ளார்கள் அதன்படி பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த 40 ஆண்டுகளில் 4.25 கோடி மக்களுக்கு பாதுகாப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நான்கு ஆண்டுகளில் 2 கோடி நபர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 1 கோடி நபர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்குவதற்கும், பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கும் 19 கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும்போது தமிழ்நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கும். ரூ.990 கோடி மதிப்பில் சங்கரன்கோவில், தேவர்குளம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், தென்காசி உள்ளிட்ட 530 கிராமங்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு தேவையான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து, மானூர் வட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் ரூ.2.59 கோடி மதிப்பில் 630 நபர்களுக்கு பட்டாக்களும், வேளாண்மைத்துறை சார்பில் ரூ.4 இலட்சம் மதிப்பிலான விசை உழுவை இயந்திரம் 2 பயனாளிகளுக்கும், ஆவின் சார்பில் தடியம்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.70 ஆயிரம் மதிப்பில் பால் பரிசோதனை கருவிகளும், மாற்றுத்திறனாளிக் நலத்துறை சார்பில் ரூ.1.33 இலட்சம் மதிப்பில் மையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி 4 பயனாளிக்கும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.32 இலட்சம் மதிப்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளும், கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.26.50 இலட்சம் மதிப்பில் 5 பயனாளிகளுக்கு கடனுதவிகளும், சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் 69 பயனாளிகளுக்கு உழவர் அடையாள அட்டைகளும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 34 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் என மொத்தம் ரூ.3.24 கோடி மதிப்பில் 748 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆயுஸ்குப்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) தவலேந்து, மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் செல்வலெட்சுமி அமிதாப், மானூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் செல்வி.ஸ்ரீலேகா அன்பழகன், வீரவநல்லூர் பேரூராட்சித்தலைவர் சித்ரா, நகர்மன்ற தலைவர்கள் பிராபகரபாண்டியன் (அம்பாசமுத்திரம்), செல்வ சுரேஷ் பெருமாள் (வி.கே.புரம்), கல்லிடைக்குறிச்சி பேரூராட்சித் துணைத்தலைவர் இசக்கி பாண்டி, வட்டாட்சியர்கள் வைகுண்டம் (அம்பாசமுத்திரம்), காஜா கரிபூன் நவாஸ் (சேரன்மகாதேவி,) செல்லத்துரை (மானூர்) உட்பட அலுலவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
