» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் 47 மையங்களில் குரூப் 2 தேர்வு: ஆட்சியர் தகவல்
புதன் 24, செப்டம்பர் 2025 4:48:00 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகிற 28ஆம் தேதி 47 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள குரூப் 2 தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II, தொகுதி II மற்றும் தொகுதி II A பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு (OMR) 28.09.2025 முற்பகல் பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய வட்டங்களில் உள்ள 47 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. மேற்படி தேர்வினை 13621 தேர்வர்கள் எழுத உள்ளனர்.
மேற்படி தேர்வானது 28.09.2025 அன்று காலை 09.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணியளவில் முடிவடையும். மேற்படி தேர்விற்கு கலந்து கொள்ளும் தேர்வர்கள் காலை 08.30 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும்.
தேர்விற்கு காலை 09.00 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தேர்வுக்கூட அனுமதி சீட்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை படித்து தேர்வர்கள் கடைபிடிக்குமாறு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க. கவுன்சிலர்களின் தயவால் தி.மு.க. பெண் சேர்மன் பதவி தப்பியது!
வியாழன் 2, அக்டோபர் 2025 5:36:32 PM (IST)

திருநெல்வேலியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வியாழன் 2, அக்டோபர் 2025 12:23:25 PM (IST)

நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் 19,879 நபர்கள் பயன்: ஆட்சியர் தகவல்!
புதன் 1, அக்டோபர் 2025 10:20:11 AM (IST)

நெல்லையில் செல்போன், பணம் பறிப்பு வழக்குகளில் 5 பேர் கைது
புதன் 1, அக்டோபர் 2025 8:44:07 AM (IST)

காந்தி ஜெயந்தி: அக்.2ம் தேதி மது விற்பனைக்கு தடை - ஆட்சியர் உத்தரவு!
திங்கள் 29, செப்டம்பர் 2025 11:42:09 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் சமூக நல்லிணக்க மீலாதுன் நபி விழா
திங்கள் 29, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)
