» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கவின் ஆணவக்கொலை: சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் மனு மீது நவ.27ல் விசாரணை!
திங்கள் 24, நவம்பர் 2025 5:19:39 PM (IST)

மென்பொறியாளர் கவின் ஆணவ படுகொலை வழக்கில் சுர்ஜித்தின் தந்தை ஜாமீன் கோரிய வழக்கு மீதான விசாரணையை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சுர்ஜித்தின் தந்தை சரவணன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். ஊடகங்களில் செய்தி வெளியாகும் வரை அது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.
சுர்ஜித் எனது மகன் என்பதை தவிர வேறு எந்த தொடர்பும் இந்த வழக்கில் எனக்கு இல்லை. இந்த வழக்கில் ஜாமீன் கோரி தொடர்ந்த மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த சம்பவத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆகவே எனக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவம் நிகழ்ந்த அன்று பணியில் தான் இருந்தார். மனுதாரர் சிறையில் இருந்த காலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
சிபிசிஐடி தரப்பில், ‘மனுதாரர் சம்பவம் நடந்த நாளில் பணியில் இல்லை. விடுமுறையில் இருந்திருக்கிறார். கொலை சம்பவம் நிகழ்ந்த இடத்தில் மனுதாரர் இருந்ததற்கான ஆதாரம் உள்ளது. இதனால் ஜாமீன் வழங்கக் கூடாது’ எனக் கூறப்பட்டது.
கொலையான கவின் தாயார் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘மனுதாரரின் தலையீடு காரணமாக எனது புகார் தாமதமாகவே விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்கில் கூடுதல் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது. இதையடுத்து விசாரணையை நவ.27-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளர்கள்; 10,635 பேர் நீக்கம்: இறுதி வாக்காளர் பட்டியல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:39:15 PM (IST)

பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

