» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தென்காசியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா : திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்!

வெள்ளி 28, நவம்பர் 2025 7:52:04 AM (IST)



தென்காசியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை திமுக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பாக தமிழக துணை முதல்வரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்  பிறந்தநாள் விழா தென்காசி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் எஸ். தங்கராஜ்பாண்டியன்  தலைமை தாங்கினார். 

மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கே. பி. குமார் பாண்டியன், மூத்த வழக்கறிஞர்கள் அப்துல் மஜீத், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சக வழக்கறிஞர்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் மற்றும்  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப் பட்டது.

நிகழ்ச்சியில்  மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரகுமான் சாதத், காளிராஜ், செந்தூர்பாண்டியன், முத்துக்குமாரசாமி, சிதம்பரம், ஆனந்த், தாகிரா பேகம், ஜான் தாமஸ் ஸ்கேன்டர், ராஜா, கதிரவன், ஞானப்பிரகாசம்  சொக்கலிங்கம், சண்முக மணிகண் டன், சத்யா, தமிழ் செல்வி, கிரிஜா, சசிகுமார்,  முத்துராஜ், இசைத்திரண், கண்ணன், காளிதாஸ், சைமன்துரை, கபில்குமார், சுபசெல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory