» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு: சபாநாயகரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!

செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:30:28 AM (IST)



ராதாபுரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் என்று சபாநாயகரை நேரில் சந்தித்து வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 2019 ம் ஆண்டு முதல் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இயங்கி வருகிறது. ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சமுதாய நலக்கூட கட்டிடத்தில் தற்காலிகமாக நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகாமையில் சர்வே எண் 461/1A3 யில் 3 ஏக்கர் 60 சென்ட் இடம் நீதிமன்றம் மற்றும் நீதிபதி குடியிருப்பு கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது இயங்கி வரும் சமுதாய நலகூட கட்டிடம் மிகவும் சேதமடைந்து வருகிறது. ஆகவே புதிய நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு போதிய நிதி ஒதுக்க வலியுறுத்தி ராதாபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் இசக்கியப்பன் தலைமையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் விரைவில் நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்தார். இந்நிகழ்வில் அரசு வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், ராதாபுரம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் கந்தசாமி வழக்கறிஞர்கள் அன்றன் செல்வகுமார், மனோராஜ், காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory