» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:04:20 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் 3வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், விஜய அச்சம்பாட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 27) என்பவர் 3 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு, ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், சரித்திர பதிவேடு குற்றவாளி ராமகிருஷ்ணனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ் குமார் இன்று (2.12.2025) குற்றவாளிக்கு தண்டனை வழங்கினார்.
தண்டனை விபரம் பின்வருமாறு: 5(m) r/w 6 of POCSO Act-ன்படி 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம், SC/ST Act Sec 3 (1) (w) (i)-ன்படி 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேற்சொன்ன சிறை தண்டனையினை ஏக காலத்தில் (concurrent) அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் அவர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய டி.எஸ்.பி. யோகேஷ் குமார் (தற்போது விருதுநகர் உட்கோட்டம்), நீதிமன்ற விசாரணை துரிதமாக நடைபெற, சிறப்பாக கண்காணிப்பு செய்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால், 2025-ம் ஆண்டில் மட்டும், இதுவரை 26 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 27 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட நான்கு நபர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனையும், நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி அதிகாரி கைது|
செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:32:36 PM (IST)

மஞ்சப்பை விருதிற்கு விண்ணப்பிக்கலாம்; முதல் பரிசு ரூ. 10 லட்சம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 12:35:27 PM (IST)

புதிய நீதிமன்ற கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கீடு: சபாநாயகரிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 10:30:28 AM (IST)

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய திட்டங்கள் தமிழகத்தில்... அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
திங்கள் 1, டிசம்பர் 2025 5:05:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 97.98% எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம்: ஆட்சியர் சுகுமார் தகவல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 12:43:02 PM (IST)

மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவி வெட்டிக் கொலை : நெல்லை வாலிபர் வெறிச்செயல்!
திங்கள் 1, டிசம்பர் 2025 8:31:41 AM (IST)




