» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மருத்துவமனையில் வேலை என கூறி ரூ.26.25 லட்சம் மோசடி: போலி அதிகாரி கைது|

செவ்வாய் 2, டிசம்பர் 2025 8:32:36 PM (IST)

திருநெல்வேலியில் மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.26.25 லட்சம் பணத்தை மோசடி செய்த போலி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். 

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி, பாரதியார் நகரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (54) என்பவரிடம் திருநெல்வேலி டவுண் பகுதியை சேர்ந்த செய்யது அகமது கபிர்(41) என்பவர், இஎஸ்ஐசி மருத்துவமனையில், நிர்வாக அதிகாரியாக ஆக வேலை செய்வதாக ஏமாற்றி, கோபாலகிருஷ்ணனின் மகளுக்கு, இஎஸ்ஐசி மருத்துவமனையில் கிளெர்க் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து செய்யது அகமது கபிர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோபாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனிடம் புகார் அளித்தார். அதன் பேரில், புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு-I டி.எஸ்.பி. விஜயகுமார் மேற்பார்வையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை செய்தனர். அதில் கோபாலகிருஷ்ணன், செய்யது அகமது கபிர் என்பவரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாற்றப்பட்ட விவரம் உண்மை என தெரிய வந்தது. அதன் பேரில் 14.10.2025 அன்று மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், செய்யது அகமது கபிர் என்பவரை இன்று (2.12.2025), மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர், தலைமை காவலர்கள் முத்துராமலிங்கம் மற்றும் கலையரசன் ஆகியோர் சேர்ந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த வழக்கில் மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்த குற்றவாளியை சிறப்பாக செயல்பட்டு, கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory