» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் ரயில் பாதை மறு சீரமைப்பு பணி : பேருந்துகளை இயக்க கோரிக்கை
புதன் 17, டிசம்பர் 2025 8:25:03 AM (IST)
தூத்துக்குடியில் ரயில் பாதை மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்திற்கு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா,நுகர்வோர் கல்வி& ஆராய்ச்சி நடுவம் கவுரவ செயலாளர் ஆ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரயில் பாதை மறு சீரமைப்பு பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் முத்து நகர் விரைவு ரயில் மற்றும் மைசூர் விரைவு ரயில் இரண்டிற்கும் மணியாச்சியிலிருந்து ரயில் பயணிகளை தூத்துக்குடி அழைத்து வரவும் அது போல தூத்துக்குடியிலிருந்து மணியாச்சிக்கு ரயில் பயணிகளை அழைத்துச் செல்லவும் பேருந்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே நிர்வாகம் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இடையே ரயில் பாதை மறு சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தூத்துக்குடியில் இருந்து இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளில் இன்று (17-12-2025) முதல் வரும் 23-12-2025 வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி நெல்லை இடையேயான பாசஞ்சர் ரயில்கள் இன்று முதல் 23ஆம் தேதி வரையிலும் தூத்துக்குடி மணியாச்சி இடையிலான பாசஞ்சர் ரயில்கள் இன்று முதல் 23ஆம் தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னை தூத்துக்குடி இடையிலான இடையிலான முத்துநகர் விரைவு ரயில் (வ. எண்.12693) வரும் 20, 21, 22, ஆகிய தேதிகளில் மணியாச்சி வரை மட்டுமே இயங்கும். இந்த ரயில் அதிகாலை 5மணிக்கு மணியாச்சி வந்து சேரும். அதைப்போல தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் முத்து நகர் விரைவு ரயில்(வ.எண்.12694) வரும் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மணியாச்சியில் இருந்து இரவு 09-10 மணிக்கு புறப்படும்.
இதைப்போலவே மைசூர்-தூத்துக்குடி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16236) வரும் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மணியாச்சி வரை மட்டுமே இயங்கும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மணியாச்சியிலிருந்து மாலை 06.00 மணிக்கு புறப்படும்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் ரயில் மணிக்கு மணியாச்சி ரயில் நிலையத்திற்கு காலை 5மணிக்கு வரும் நிலையில் மணியாச்சியில் இருந்து ரயில் பயணிகள் தூத்துக்குடி வந்து சேர மிகுந்த சிரமங்கள் உள்ளன. ரயிலில் உயர் வகுப்புகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் மணியாச்சிக்கு வந்து செல்ல முடியும். ஆனால் சாதாரண இரண்டாம் வகுப்பு பெட்டியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் மணியாச்சி வந்து செல்ல மிகுந்த சிரமப்படுவார்கள்.
எனவே 20, 21, 22, 23 ஆகிய தேதிகளில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் மற்றும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை மணியாச்சிக்கு கூட்டிச் செல்லவும் அதேபோல் மணியாச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்து வரவும் பேருந்து போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம் ரயில்வே நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
முன்பதிவு பயணிகளை பொறுத்த அளவில் தங்கள் பயணத்திற்கான முழு கட்டணத்தையும் செலுத்தி இருப்பதால் இந்த பேருந்து போக்குவரத்திற்கு ஆகும் செலவினை ரயில்வே நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் வகையில் செய்து கொடுக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
சந்திரன்Dec 18, 2025 - 11:30:14 AM | Posted IP 162.1*****
எம்பவர் சங்கர் தான் ஏற்பாடு செய்ய வேண்டும் ஆனால் அவர் செய்ய மாட்டார் ஏனென்றால் அவர் ஒரு விளம்பரப் பிரியர் மட்டுமே
ஜான்Dec 17, 2025 - 02:15:23 PM | Posted IP 172.7*****
மணியாச்சியில் இறங்குவதற்கு பதிலாக கோவில்பட்டியில் இறங்கலாம். கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு நேரடியாக பேருந்துகளை இயக்கினால் நல்லது அந்த நிலையம் மணியாச்சியை விட வசதியாக இருக்கும்
Ctrl+G PV.NathanDec 17, 2025 - 01:57:50 PM | Posted IP 172.7*****
Sir, correct request given at correct time. In favour of Train passengers.
Thanks a lot.
ஆனந்த்Dec 17, 2025 - 09:18:59 AM | Posted IP 162.1*****
இவரே பஸ் ஏற்பாடு செய்யலாமே
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)


கந்தசாமிDec 18, 2025 - 11:31:37 AM | Posted IP 162.1*****