» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!

வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது கார் மோதிய விபத்தில் எலெக்ட்ரிசியன் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சி சந்தையார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் வீரபொம்மு (55), இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலெக்ட்ரிசியன் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து தனது மோட்டார் பைக்கில் பாஞ்சாலங்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

தூத்துக்குடி புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப் பதிவு செய்து காரை ஓட்டி வந்த ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குமாரகிரி நடுத் தெருவைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ராமசுப்பு (36) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

BabuDec 18, 2025 - 06:36:29 PM | Posted IP 104.2*****

spsonnar ana innum car la red blue light pottu suthuraga need action numbera pathu fine podalame

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory