» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பு வருடத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் இதுநாள் வரை 689.86 மி.மீ மழை அளவு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த மழை அளவானது இயல்பான மழையளவை விட 27.66 மி.மீ கூடுதல் மழை அளவு ஆகும்.

பாபநாசம் நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து 839.757கன அடியாக உள்ளது. நீர்தேக்கத்திலிருந்து வெளியேறும் அளவு 800 கன அடியாக உள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்கமையங்களில் நெல் 8.53 மெ.டன், உளுந்து 101.88 மெ.டன், கம்பு 16.65 மெ.டன், சூரியகாந்தி 7.68 மெ.டன், பாசிப்பயறு 5.058 மெ.டன், சோளம் 3.72 மெ.டன், பருத்தி 1 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் 2185 மெ.டன் யூரியா,2775 மெ.டன் காம்ப்ளக்ஸ், 2077 மெ.டன் டி.ஏ.பிஇ 738 மெ.டன் பொட்டாஷ் மற்றும் எஸ்.எஸ்.பி. 481 மெ.டன் உரங்கள் இருப்பில் உள்ளன. நடப்பு டிசம்பர் 2025 மாத தேவைக்கு நமது மாவட்டத்திற்கு 2900 மெ.டன் யூரியா, 2100 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் 1100 மெ.டன் டி.ஏ.பி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட உர நிறுவனங்களால் இம்மாத தேவைக்கான 1300 மெ.டன் யூரியா 420 மெ.டன் டி.ஏ.பி மற்றும் 680 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

உயிர்ம வேளாண்மை இடுபொருட்கள்: உயிர்ம வேளாண்மையை ஊக்குவிக்கும் பொருட்டு உயிர்ம வேளாண்மைக்கு பயன்படும் உயிர் உரங்கள் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் போன்றவற்றை பயன்படுத்தி விவசாயிகள் பயனடையும் பொருட்டு மாவட்டத்தில் அசோஸ்பைரில்லம், ரைசோபியம் போன்ற உயிர் உரங்கள் 41720 லிட்டர் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடெர்மாவிரிடி 21000 கிலோ, பேசிலஸ்சப்டிலிஸ் 5500 கிலோ, என்.பி.வி 400 லிட்டர், சூடோமோனஸ் 12000 கிலோ, மெட்டாரைசியம் 1000 கிலோ, டிரைகோகிரம்மா கைலோனிஸ் 750 சி.சி போன்றவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலம் இருப்பு வைக்கப்பட்டு பல்வேறு திட்டங்களின் கீழ் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம்-வேளாண்மைத்துறை:2023-2024ம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் தொகை நெல் III பயிருக்கு 5 குறுவட்டங்களுக்கு ரூபாய் 17.8 லட்சம் - 70 விவசாயிகளுக்கும் மக்காச்சோளம் ரூபாய் 4.19லட்சம் 27 விவசாயிகளுக்கும் நிலுவையிலுள்ளது. அரசு மானியம் கிடைக்கப்பெற்றதும் உரிய விவசாயிகளுக்கு திட்ட வழிமுறைகளின்படி, அவரவர் வங்கி கணக்கில் இப்கோ டோக்கியோ காப்பீடு நிறுவனம் மூலமாக தொகையானது விரைவாக வரவு வைக்கப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவுவங்கிகள் மூலம் குறுகியகால மற்றும் மத்தியகால கடன்கள்: தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கங்கள் மூலம் 31.03.2025 வரை ரூ.263.50 கோடிக்கு 22463 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 16485 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.194.77கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது.மேலும் 01.04.2025 முதல் 15.12.2025 வரை ரூ.208.64 கோடிக்கு 18410 விவசாயிகளுக்கு விவசாய பயிர் கடனாக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 13152 சிறு/குறு விவசாயிகளுக்கு ரூ.149.14 கோடி விவசாய பயிர் கடனாக வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேஷ், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) மனோரஞ்சிதம், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

M.ramamoorthiDec 18, 2025 - 08:29:12 PM | Posted IP 162.1*****

கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இன்றுவரை எந்த நிவாரணமும் அளிக்கவில்லை அதுபோல் கடந்தாண்டு மலையால் பாதித்த பயிர்களுக்கும் இதுவரை எந்த சேதாரத்துக்கு எந்த தொகையும் வரவைக்கப்படவில்லை கோவில்பட்டி ஏரியா அதேபோல் எந்த பேங்கிற்கு சென்றாலும் விவசாயிகளை ஒரு கோமாளியாக சித்தரித்து அவமானப்படுத்து கிறார் இதை விவசாயிகள் அனைவரும் வன்மையாக கண்டிக்கிறோம் அதேபோல் இந்த அரசாங்கம் விவசாயிகளுக்கான விவசாயிகளுக்கான நறுமதிப்பை கொடுக்க வேண்டும் என இந்த அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும் அப்படி மதிப்பு கொடுக்க தவறும் பட்சத்தில் அந்த அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory