» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பட்டப்பகலில் வாலிபர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை: இருவர் வெறிச்செயல் - உறவினர்கள் மறியல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 11:37:45 AM (IST)

சாத்தான்குளத்தில் பட்டப்பகலில் வாலிபரை ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்த வழக்கில் 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் சுடலை முத்து (25). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை 10:30 மணி அளவில் அங்குள்ள ஒரு சினிமா தியேட்டர் முன்பு நின்று நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2பேர் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சுடலைமுத்து நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள பாரில் மது குடித்துக் கொண்டிருந்த போது, எதிரே அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் அவரது நண்பர் ஜெகதீஷ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. பாரில் இருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி விட்டனர்.
இந்த முன் விரோதம் காரணமாக சுந்தர் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சுடலைமுத்துவை கொலை செய்தது தெரியவந்தது. பட்டபகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
உறவினர்கள் சாலை மறியல்
இதனிடையே சுடலைமுத்துவின் உறவினர்கள், அவரது உடலை எடுக்க விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை உடலை அங்கிருந்து எடுக்க கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.
சம்பவ இடத்திற்கு சாத்தான்குளம் (பொறுப்பு) டி.எஸ்.பி. ராமச்சந்திரன், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட சுடலைமுத்துவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உடனடியாக குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கொலையாளிகள் கைது
சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகள் இருவரையும் சாத்தான்குளம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் சம்பவ இடம் வந்து பார்வையிட்டு மேல்விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக பிரச்சனை இருந்ததால் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார், தட்டார் மடம் இன்ஸ்பெக்டர் வேலம்மாள், மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை, நாசரேத் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை பணிகளின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!!
சனி 20, டிசம்பர் 2025 9:20:36 PM (IST)

நெல்லை பொருநை அருங்காட்சியகத்தில் இந்தியில் 'ராம்' என எழுதப்பட்டதால் சர்ச்சை!
வெள்ளி 19, டிசம்பர் 2025 3:15:19 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)

ஆட்சிமொழிச் சட்டவாரம் விழிப்புணர்வு பேரணி: மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்
புதன் 17, டிசம்பர் 2025 4:46:23 PM (IST)

தென்காசி மாவட்டத்தில் பரவலாக மழை : சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு விடுமுறை!
புதன் 17, டிசம்பர் 2025 12:26:29 PM (IST)

ரவுடியின் மனைவி விஷம் குடித்து தற்கொலை : 2 மகள்களுக்கும் தீவிர சிகிச்சை!!
புதன் 17, டிசம்பர் 2025 11:54:59 AM (IST)


சாமானியன்Dec 20, 2025 - 04:48:58 PM | Posted IP 172.7*****