» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் நீக்கம் : வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு!

வெள்ளி 19, டிசம்பர் 2025 4:00:19 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026ன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் - ஆட்சியர் இளம்பகவத் வெளியிட்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4-ந் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக விநியோகம் செய்யப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் டிசம்பர் 14-ம் தேதி வரை திரும்ப பெறப்பட்டன. 

இதன் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இளம்பகவத், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் 27.10.2025 அன்று நடப்பில் இருந்த வாக்காளர் பட்டியலின் படி ஆண்கள் 7 லட்சத்து 27 ஆயிரத்து 512 பேர், பெண்கள் 7 லட்சத்து 62 ஆயிரத்து 939 பேர், திருநங்கைகள் 234 பேர் ஆக மொத்தம் 14 லட்சத்து 90 ஆயிரத்து 685 வாக்காளர்கள் இருந்தனர். 

இந்த வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியின் போது ஆண்கள் 78 ஆயிரத்து 288 பேர், பெண்கள் 84 ஆயிரத்து 187 பேர்,திருநங்கைகள் 52 பேர் ஆக மொத்தம் 1 லட்சத்து 62 ஆயிரத்து 527 பேர் இடமாற்றம், கடண்டறிய இயலாமை, இறப்பு, இரட்டை பதிவு, கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப சமர்பிக்காமை ஆகிய காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதில், இறந்தவர்கள் 57 ஆயிரத்து 192 பேர், நிரந்தர குடிபெயர்வு பெற்றவர்கள் 58 ஆயிரத்து 889 பேர், இல்லாதவர்கள் 39 ஆயிரத்து 723 பேர், இதர காரணங்கள் 104 பேர், இரட்டை பதிவு 6 ஆயிரத்து 619 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் வரைவு வாக்காளர் பட்டியலில் விளாத்திகுளம் தொகுதியில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 947 பேரும், தூத்துக்குடியில் 2 லட்சத்து 36 ஆயிரத்து 461 பேரும், திருச்செந்தூரில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 631 பேரும், ஸ்ரீவைகுண்டத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 54 பேரும், ஓட்டப்பிடாரத்தில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 536 பேரும், கோவில்பட்டியில் 2 லட்சத்து 31 ஆயிரத்து 529 பேரும், மாவட்டத்தில் 6 லட்சத்து 49 ஆயிரத்து 224 ஆண்கள், 6 லட்சத்து 78 ஆயிரத்து 752 பெண்கள், 182 திருநங்கைகள் ஆக மொத்தம் 13 லட்சத்து 28 ஆயிரத்து 158 பேர் உள்ளனர்.

மேலும் வாக்குச்சாவடிகள் வாரியாக பட்டியலில் இடம்பெறாதவர்களின் விவரங்கள் பொதுமக்கள் அறிவதற்கு ஏதுவாக வெளியிடப்படும். இந்த பட்டியல் தொடர்பாக உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனை மனுக்களை 18.1.2026 வரை அளிக்கலாம். மேலும், 1.1.2026-ஐ தகுதி நாளாக கொண்டு தகுதி பெற்ற வாக்காளர்களும் பட்டியலில் பெயர் சேர்க்க மனு அளிக்கலாம். அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த மனுக்கள் பெறப்படும். பின்னர் 17.2.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, தூத்துக்குடி உதவி கலெக்டர் பிரபு, தேர்தல் பிரிவு தாசில்தார் தில்லைபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

JosephmasilmaniDec 20, 2025 - 09:55:03 AM | Posted IP 162.1*****

State name and language not work in online

JosephmasilmaniDec 20, 2025 - 08:35:46 AM | Posted IP 172.7*****

Votter

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory