» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உறவினர் காதை கத்தியால் வெட்டிய போலீஸ் ஏட்டு: நெல்லையில் பரபரப்பு

சனி 27, டிசம்பர் 2025 8:50:11 AM (IST)

நெல்லையில் கிறிஸ்துமஸ் விருந்தில் ஏற்பட்ட தகராறில் உறவினர் காதை போலீஸ் ஏட்டு கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாநகர போலீசில் ஏட்டாக பணியாற்றி வருபவர் டைசன் துரை (37). இவர் நெல்லை மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் விடுமுறையில் சென்ற அவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை அருகே பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் மது விருந்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த விருந்தில் டைசன்துரையின் சகலை முறை உறவினரான மெல்வின் (32) என்பவரும் தனது நண்பர்களுடன் கலந்து கொண்டார். மெல்வினின் நண்பர்களிடம் டைசன்துரை பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. உடனே மெல்வின், டைசன்துரையை சமாதானப்படுத்த முயன்றார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த டைசன்துரை அங்கு காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மெல்வினின் காதில் வெட்டினார். இதில் அவருக்கு காதில் சிறிய ரத்தக்காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த மெல்வின் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து புகாரின்பேரில், பாளையங்கோட்டை தாலுகா போலீசார் டைசன்துரை மீது ஆபாசமாக பேசி, ஆயுதத்தால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். நெல்லையில் கிறிஸ்துமஸ் விருந்தில் ஏற்பட்ட தகராறில் உறவினரின் காதை போலீஸ் ஏட்டு கத்தியால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory