» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபத்திருவிழா கோலாகலம் : திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
திங்கள் 19, ஜனவரி 2026 8:26:27 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப திருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் நெல்லை டவுன் பகுதியில் உள்ள நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தையொட்டி பத்ர தீபத் திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீபத்திருவிழாவும் நடைபெறும்.
இந்த திருவிழாக்கள் காலம் காலமாக நடந்து வருகின்றன. இந்த ஆண்டில் லட்ச தீபத்திருவிழா கடந்த 7-ந் தேதி மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
13-ந் தேதி மாலை 6 மணிக்கு சுவாமி கோவில் மணிமண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றி வைக்கப்பட்டு அணையா விளக்காக எரிந்து வந்தது. தை அமாவாசை நாளான நேற்று மாலை தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு, கோவிலின் பிரதான கொடிமரம் அருகே வைக்கப்பட்டிருந்த நந்தி தீபம் ஏற்பட்டது.
தொடர்ந்து கோவில் பிரகாரங்கள் முழுவதும் அகல் விளக்குகளால் தீபங்கள் ஏற்றப்பட்டு ஜொலித்தன. நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அகல் விளக்குகளில் தீபமேற்றி ஓம் நமச்சிவாய முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஏற்றப்படுவது போன்ற தீபங்கள் நெல்லையப்பர் கோவிலிலும் நேற்று ஏற்றப்பட்டது. சிவன், விநாயகர், அய்யப்ப சுவாமி உள்ளிட்ட தற்காலிக சுவாமி சிலைகள் உருவாக்கப்பட்டு அதன்மேல் சுழலும் தீப கோபுரங்கள் வைக்கப்பட்டு விளக்குகள் ஏற்றப்பட்டன.
ராட்டினம் உள்பட பல்வேறு வடிவங்களில் சுமார் 4 ஆயிரத்து மேற்பட்ட சுழல் விளக்குகளில் தீபங்கள் ஏற்றப்பட்டன. இதற்காக கண்ணாடியில் முதலில் தண்ணீரை நிரப்பி அதில் நீலம், மஞ்சள், வெள்ளை நிறமிகள் சேர்க்கப்பட்டு சிறிய தடுப்பு அரண் உருவாக்கப்படும். பின்னர் நல்லெண்ணெய் ஊற்றப்பட்டு அதன்மீது தீபம் ஏற்றப்படும்.
இந்த தீபங்கள் குறைந்தது 3 முதல் 4 மணி நேரம் தொடர்ந்து எரியும். ஒரு முறை பயன்படுத்தப்படும் டம்ளர்கள் அடுத்த முறை பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே ஒர்க்ஷாப் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை : உறவினர் கைது!
சனி 17, ஜனவரி 2026 8:40:25 AM (IST)

வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை : தி.மு.க. பிரமுகர் உள்பட 3 பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 9:05:50 AM (IST)

நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு 18-ஆம் தேதி சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
புதன் 14, ஜனவரி 2026 9:02:13 PM (IST)

கல்லிடைக்குறிச்சி அஞ்சலகத்தில் சமத்துவப் பொங்கல்
புதன் 14, ஜனவரி 2026 8:55:43 PM (IST)

கல்லிடைக்குறிச்சி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா
புதன் 14, ஜனவரி 2026 3:19:54 PM (IST)

ஆபாச வீடியோ அனுப்பி போலீஸ்காரர் பாலியல் தொல்லை: ஆட்சியரிடம் இளம்பெண் பரபரப்பு புகார்
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:24:06 AM (IST)

