» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மதமாற்றம்? – இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரிடம் புகார் மனு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:40:59 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளிடம் மதமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் மருத்துவமனை முதல்வரிடம் (Dean) கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம், சில அமைப்புகள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவமனை முதல்வரிடம் அளித்த மனுவில், "நோயாளிகளின் உறவினர்களுக்கு வார்டுகளுக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

ஆனால், மதமாற்றக் குழுவினரை மட்டும் பாதுகாவலர்களும், சில பணியாளர்களும் கையூட்டுப் பெற்றுக்கொண்டு வார்டுகளுக்குள் அனுமதிப்பதாகத் தெரிகிறது. ஸ்ட்ரெச்சர் தள்ளுவது முதல் சிறிய பணிகளுக்குக் கூட நோயாளிகளிடம் பணம் வசூலிக்கப்படும் நிலையில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களுக்கு உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது. மருத்துவமனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து மதப்பிரச்சாரம் செய்பவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுவைப் பெற்றுக்கொண்ட மருத்துவமனை முதல்வர், இந்தப் புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும் மருத்துவமனை வளாகத்தில் மதப்பிரச்சாரம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி எச்சரிக்கைப் பதாகைகள் வைக்கப்படும். விதிகளை மீறி மதமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் பிடிபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலாளர் வசந்தகுமார், மாநிலத் துணைத் தலைவர் ராமகுணசீலன், மாவட்ட அமைப்பாளர் சுடலைமணி, நைனா மற்றும் நிர்வாகிகள் இராஜவேல், சிம்பு கண்ணன் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
சாதாரண நடுநிலை மனிதன்Feb 3, 2026 - 10:18:19 PM | Posted IP 104.2*****
நண்பா! சாப்பாடு, ரொட்டி பண், பால் அனைத்தும் நமது வரி பணத்தில் மருத்துவமனை ஊழியர்கள் தினமும் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள்... பிறகு ஏன் அவர்கள் மதத்திற்கு விளம்பரம் தேடி மதத்தை கொச்சை படுத்துகிறார்கள், நான் ஒரு ஹிந்து, ஆனால் மாதா திருநாள் மாதாவை கும்பிட மாதா கோவில் வருவேன், கிருஸ்துமஸ் அன்று ஏசுவை கும்பிட நான் படித்த சின்ன கோவில் சென்று வழிபடுவேன், இந்த மதம் ஏமாற்றுபவர்கள் சிவராத்திரி அன்று சிவன் கோவில் வாருங்கள் என்று சொல்லவில்லை, ஆனால் ஏதாவது ஒருநாள் ஏதாவது ஒரு கோவிலுக்கு போனதுண்டா, இல்லை மாதா கோவில் திருவிழா அன்று அத்திருக்கோவிலுக்குள் எத்தனை ஹிந்து நபர்கள் வழிபடுகிறார்கள் பார்த்தது உண்டா நீங்கள், நாங்கள் அந்த மாதாவை எங்கள் மாதவாக வழிபடுகிறோம், அப்படி சிவன் கோவில் திருவிழா அன்று அப்படி மாற்று மதத்தினரை காண முடியுமா, எனக்கு அந்த ஒற்றுமை நான் எதிர் பார்க்கிறேன்... கடவுள் யாரையும் பிரித்து பார்ப்பதில்லை, நாம் தான் கடவுளை பிரித்து பார்க்கின்றார்கள்.... மாறும் ஒருநாள் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன்..... நன்றி....
இம்மானுவேல் குணசிங்Feb 3, 2026 - 01:03:16 PM | Posted IP 172.7*****
தானாக மதம் மாறாமல் வலுக்கட்டாயமாக தங்கள் மதத்துக்கு மாற்றுவது கண்டிக்கத்தக்கது ஆனால் என்றைக்காவது அரசு மருத்துவமனையில் அனாதையாக ஆதரவு இல்லாமல் சிகிச்சை பெற்று வரும் ஒரு நபருக்காவது ஒரு ரொட்டித் துண்டு வாங்கி கொடுத்து அவர்களை நலம் விசாரித்து இருப்பார்களா? இந்த இந்து மக்கள் முன்னணியினர் என்பதை கூறவும் இதையெல்லாம் செய்துவிட்டு இந்த மனுவை கொடுத்திருந்தால் அவர்களுக்கு எனது ராயல் சல்யூட் எதையுமே செய்ய மாட்டேன் போய் விசாரித்து அவனுக்காக பிரார்த்தனை செய்கிறவனையும் அவனுக்கு உதவி செய்கிறவனையும் விட மாட்டேன் என்றால் நீங்கள் செய்வது எந்த விதத்தில் நியாயம் ஒன்று நீ செய் இல்லை மற்றவனை செய்ய விடு. மருத்துவ மனதில் அனுமதிக்கப்பட்டிருந்த ஏதாவது ஒரு நோயாளி இதைக் குறித்து அரசினிடமோ அல்லது காவல்துறையினரிடமோ கூறியதாக எங்காவது பதிவு இருக்கிறதா அவர்கள் இதைக் குறித்து புகார் மனு கொடுத்திருந்தால் வரவேற்கத்தக்கது இவர்கள் தங்கள் சுயநல லாபத்திற்காக அனைத்தையும் செய்கிறார்கள் என்பது நிதர்சனம்.
மேலும் தொடரும் செய்திகள்

போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்: ஆட்சியர் தகவல்!
புதன் 4, பிப்ரவரி 2026 3:47:50 PM (IST)

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்கள் : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:46:07 PM (IST)

அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 30 மேஜை நாற்காலிகள்: ராபர்ட் புரூஸ் எம்பி வழங்கினார்!
சனி 31, ஜனவரி 2026 5:25:10 PM (IST)

நெல்லை மாநகராட்சியில் காலை உணவை குப்பையில் வீசிய தூய்மை பணியாளர்கள்
சனி 31, ஜனவரி 2026 8:36:34 AM (IST)

புனித வெள்ளியன்று மதுக்கடைகளை மூட தீர்மானம் : சட்டமன்றத்தில் நிறைவேற்ற கோரிக்கை!
வெள்ளி 30, ஜனவரி 2026 5:06:09 PM (IST)

காவல் நிலையத்தில் இளைஞர்கள் மீது பொய் வழக்கு : டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் ஆஜர்!
வெள்ளி 30, ஜனவரி 2026 10:10:13 AM (IST)

அப்போFeb 4, 2026 - 12:54:09 PM | Posted IP 172.7*****