» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வங்கியில் தீ விபத்து : முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பல்! பணம், நகைகளுக்கு சேதம் இல்லை!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:16:58 AM (IST)

சங்கரன்கோவிலில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே தனியார் கட்டிடத்தின் மாடியில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று காலை 7 மணியளவில் வங்கியின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியதைக் கண்டு பொதுமக்கள் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதில் வங்கியில் இருந்த சில முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின. எனினும், பணம் மற்றும் நகைகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விடுமுறை நாள் என்பதால் வங்கியில் ஆட்கள் இல்லாததால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)


