» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் ஆட்சியர் சுகுமார் ஆய்வு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 5:31:21 PM (IST)

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா.சுகுமார் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் இராதாபுரம் ஆகிய ஜந்து சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி உத்தரவின்படி அடிப்படை வசதிகளை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, ஜோசப் உயர்நிலைப்பள்ளி மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீ மந்திரமூர்த்தி தொடக்கப்பள்ளி, பேட்டை மாநகராட்சி பள்ளி, பாட்டப்பத்து மாநகராட்சி பள்ளி, ரகுமான் பேட்டை மாநகராட்சி பள்ளி, டவுண் பாரதியார் பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையங்களில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றம் வாகன நிறுத்துமிடம் வசதி, சாய்வுதளம் வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வாக்குச்சாவடி மையங்களில் பழுதுகள் ஏதேனும் இருந்தால் அதை உடனடியாக சரி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்கள். ஆய்வின் போது மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, திருநெல்வேலி கோட்டாட்சியர் பிரியா, பாளையங்கோட்டை வட்டாட்சியர் இசைவாணி, திருநெல்வேலி வட்டாட்சியர் சந்திரகாசன் உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே லாரியின் பின்புறம் ஆம்னி பேருந்து மோதி விபத்து - 21 பேர் படுகாயம்!
ஞாயிறு 31, மே 2026 10:26:11 AM (IST)

ஆலங்குளம் அருகே 6 பேருக்கு அரிவாள் வெட்டு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
சனி 30, மே 2026 5:23:02 PM (IST)

திருமண விழாவில் புகுந்து 6 பேருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - முகமூடி கும்பல் வெறிச்செயல்!
சனி 30, மே 2026 8:52:51 AM (IST)

கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)

7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வட்டாட்சியருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
வியாழன் 28, மே 2026 9:28:37 AM (IST)


