» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அக்னிவீர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்: நெல்லை மாவட்ட ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 3:23:31 PM (IST)
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அக்னிவீர் திட்டத்தின் கீழ் 2026-27-ம் வருடத்திற்கு இந்திய இராணுவத்தில் சேர்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 01/04/2026. வயது வரம்பு 17.5 முதல் 22 வரை. இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுதலாம். கல்வித்தகுதி, உடல் தகுதி, தேர்வுக் கட்டணம் போன்ற விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அக்னிவீர் திட்டத்தில் இராணுவம், விமானப்படை, கடற்படைகளில் சேர்வதற்கு இளைஞர்களை தயார்ப்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உடல் தகுதி பயிற்சிகள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரையிலும், எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் வார இறுதி நாட்களில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
குறுகிய கால முன் தயாரிப்புடன் வெற்றி பெறுவதற்கு மிக அதிகமான வாய்ப்புள்ள இத்தேர்வினை எழுதி, இந்திய இராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இத்தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறும், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் அனைத்து வட்டங்களிலும் இத்தேர்வுக்கென நடத்தப்படும் கட்டணமில்லா பயிற்சியில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறுமாறும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார். கேட்டுக்கொள்கிறார்.
அக்னிவீர் தேர்வு விவரங்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.04.2026.
வயது வரம்பு: 17.5 முதல் 22 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வினை தமிழ் மொழியிலும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: கல்வித்தகுதி மற்றும் உடல் தகுதி குறித்த விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)


