» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ஆய்வு
புதன் 1, ஏப்ரல் 2026 4:43:34 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர்கள் ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத், அனுபா ஸ்ரீ வஷ்தவா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026 வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்துத் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தல் பொதுப் பார்வையாளர் மரு. ரிஷிகேஷ் பாஸ்கர் யசோத் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மானூர் தாலுகாவில் உள்ள பல்வேறு மையங்களில் இன்று ஆய்வு நடத்தினார்.
அழகியபாண்டியபுரம் TDTA ஆரம்பப்பள்ளி, உக்கிரன்கோட்டை செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, வாகைகுளம் செயின்ட் பால்ஸ் நடுநிலைப்பள்ளி, மானூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர் நேரில் பார்வையிட்டார்.
அதேபோல், தேர்தல் பொதுப் பார்வையாளர் அனுபா ஸ்ரீ வஸ்தவா அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். நாடார் யூனியன் நடுநிலைப்பள்ளி மற்றும் விக்கிரமசிங்கபுரம் PLWA மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்களைப் பார்வையிட்டார்.
திருநெல்வேலி - தென்காசி மாவட்ட எல்லையான முதலியார்பட்டி சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் தொடர்பான பணிகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த பதிவேடுகளையும் அவர் விரிவாக ஆய்வு செய்தார்.
வாக்குப்பதிவு எவ்வித இடையூறுமின்றி அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)

நெல்லையப்பர் கோவில் ஆடிப் பூரத் திருவிழா: காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம்!
திங்கள் 13, ஜூலை 2026 8:44:13 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)


