» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷு மகாஜன் நியமனம் : தேர்தல் ஆணையம் உத்தரவு!

வியாழன் 2, ஏப்ரல் 2026 7:42:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக விஷு மகாஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தயார் நிலை குறித்து ஆய்வு செய்த இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மற்றும் சேலம் மாவட்டங்களுக்குப் புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் ஆட்சியர்களை நியமித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் செயலாளர் லதா திரிபாதி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி: தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியராக விஷு மகாஜன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தின் புதிய மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியராக டாக்டர் அ. அருண் தம்புராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பணியில் இணைந்தது குறித்த அறிக்கையை ஏப்ரல் 3-ஆம் தேதி (நாளை) காலை 11:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தற்போது மாற்றப்பட்டுள்ள அதிகாரிகள், தேர்தல் பணிகள் முடியும் வரை தேர்தல் தொடர்பான வேறு எந்தப் பணிகளிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடமாற்றத்திற்கான பின்னணி:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த இளம்பகவத் ஆளுங்கட்சிக்குச் சார்பாகச் செயல்படுவதாகவும், மாற்றுக் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க அனுமதி மறுத்துப் புறக்கணிப்பதாகவும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து தேர்தல் ஆணையத்திற்குக் கடிதங்கள் மற்றும் புகார்களை அனுப்பியதன் அடிப்படையில் அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தேர்தல் தேதிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் மிக முக்கியமான பொறுப்பில் இருக்கும் அதிகாரி மாற்றப்பட்டிருப்பது தூத்துக்குடி மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து

BabuApr 3, 2026 - 06:48:18 PM | Posted IP 104.2*****

oru ovt servant yepo aduthavanukaga velai seivano than sugathukaga pathaviyil irukano van yellam antha velaiku thaguthiye ilathavan athu mattum illai oru mail anupuna kooda padika athuku rep panna collector off la rutharum kidayathu masam porakurathuku munnadiye makkal vari panathula sampalam vanga theriyum ana 10 paisa ku makkaluku velai seiya matanuga

பெ.ராஜேஷ் செல்வரதி--தொல்லியல் ஆர்வலர்-தூத்துக்குடிApr 3, 2026 - 07:04:14 AM | Posted IP 162.1*****

யாம் அறிந்த வரை அரசியல் மற்றும் மதம் சார்பில் இல்லாமல் மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்களின் நலம், மாணவர்களின் நலன், தமிழ் நாகரிகத்தின் அடையாளங்கள் பாதுகாப்பு, நீர்நிலைகள் பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகள் போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி இ.ஆ.பணியில் தன்னலமற்று தினமும் நீண்ட நேரம் உழைத்து வந்த நம் தமிழ் வழியில் பயின்ற வரலாற்று துறையின் மாணவரான நல்ல ஆட்சியர் அய்யா கல்.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள் எங்கிருந்தாலும் ஜொலிக்கும் வைரம் போன்றவர்.

அமலாApr 2, 2026 - 08:13:00 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி கலெக்டர் இரவு முழுவதும் ஸ்பிக் மோட்டலில் பொழுதுபோக்கியதாக தகவல்கள் வந்துள்ளன. ஆளும் கட்சி என்ன எந்த மனிதன் உயிர் போகும் அபாயத்தில் போன் செய்தாலும் அண்ணாச்சி எடுப்பதே இல்லை. இதில் ஆளும்கட்சிக்கு சாதாகமா? அட

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory