» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் : ரூ.17 லட்சம் மக்கள் வரிப்பணம் வீணடிப்பு?

வெள்ளி 15, மே 2026 8:42:53 PM (IST)



விளாத்திகுளம் பேரூராட்சி 13-வது வார்டில், முறையாகத் திட்டமிடாமல் கட்டப்பட்ட புதிய கழிவுநீர் கால்வாயால் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 13-வது வார்டு பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் ரூ. 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், அதனை மூடும் சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கவும் டெண்டர் விடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

தற்போது கழிவுநீர் கால்வாய் கட்டும் பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளன. ஆனால், கால்வாயின் தரைமட்டம் முறையாக அமைக்கப்படாததால், கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி கால்வாய்க்கு உள்ளேயே குளம் போல் தேங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாகப் பெய்த தொடர் மழையினால், மழைநீரும் கழிவுநீருடன் கலந்து அதன் அளவு அதிகரித்துள்ளது.

தேங்கியுள்ள அசுத்த நீரால் அப்பகுதியில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதோடு, துர்நாற்றமும் வீசி வருகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மர்மக் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "மக்களின் வரிப்பணத்தில் 17 லட்சம் ரூபாய் செலவு செய்தும், எந்தப் பயனும் இன்றி சுகாதாரச் சீர்கேடுதான் மிஞ்சியுள்ளது" என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அரசு தலையிட்டு மக்களின் பணத்தை வீணடிக்காமல், இந்தக் கழிவுநீர் கால்வாயைச் சீரமைத்து கழிவுநீர் தடையின்றி வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


மக்கள் கருத்து

Babuமே 16, 2026 - 10:54:17 PM | Posted IP 172.7*****

makkal kelvi kekkanum apo than intha itha katunavan bill pass panavan approval panavana yellam thuki ulla vainga

Indianமே 16, 2026 - 12:03:27 PM | Posted IP 162.1*****

Please check with MLA Sreenath to solve the issues.

அதானேமே 16, 2026 - 07:50:03 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் எல்லா இடத்தில கொசுக்கள் உற்பத்தியாகும் இடம், இது எல்லாம் மாநகராட்சி தான் காரணம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory