» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிக்க ஸ்ரீநாத்திற்குத் தகுதியில்லை : திமுக வழக்கறிஞர் பேட்டி

புதன் 20, மே 2026 3:18:48 PM (IST)

அனிதா ராதாகிருஷ்ணனை விமர்சிக்க காங்கிரஸ் பெருமாள்சாமி மற்றும் தவெக எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்குத் தகுதியில்லை என்று திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வக்கீல் செல்வக்குமார் கூறினார். 

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வக்குமார் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது: "காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெருமாள்சாமிக்கு அரசியல் புரிதல் இல்லை. விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்ற பிறகு, அவர் பாஜக, அமமுக, அதிமுக எனப் பல்வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டு, தற்போது மீண்டும் பண பலத்தால் காங்கிரசில் பதவி பெற்றுள்ளார். 

இவரை ஏன் கட்சியிலிருந்து நீக்கக் கூடாது எனப் காங்கிரஸ் மேலிடமே விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதிலிருந்து தப்பிக்கவே, மக்கள் பணியாற்றி வரும் அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றி அவர் அவதூறுகளைப் பரப்பி வருகிறார். ஸ்டெர்லைட் ஆதரவாளரான பெருமாள்சாமிக்கு நாவடக்கம் தேவை. இனிமேலும் தவறாக விமர்சித்தால் அவர் மீது கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடரப்படும்.

தூத்துக்குடியுடன் ஸ்ரீநாத்திற்கு என்ன சம்பந்தம்?:

தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆ.ஸ்ரீநாத் குறித்து அவர் பேசுகையில்: "தேர்தலுக்கு முன்பு தூத்துக்குடி எங்கு இருக்கிறது என்றே தெரியாமல், ஏதோ ஒரு அரசியல் அலையில் தவெக சார்பில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீநாத்திற்கும் இந்த மண்ணிற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? ஸ்ரீநாத் முதலில் தனது குழந்தைகளின் கல்வி உள்கட்டமைப்பைத் தூத்துக்குடிக்கு மாற்ற வேண்டும்.

அவரது அடையாள அட்டை முகவரியைத் தூத்துக்குடிக்கு மாற்றிய பிறகே, 7 முறை வென்ற மக்கள் தலைவரான அனிதா ராதாகிருஷ்ணனைப் பற்றிப் பேச வேண்டும். ஸ்ரீநாத்தின் தகுதியற்ற விமர்சனங்களுக்கு திமுக பதிலளிக்க வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து

தொண்டன் ஒருவன்மே 20, 2026 - 04:43:22 PM | Posted IP 172.7*****

யாருடா நீங்க? நம் மக்கள் எல்லாம் ஸ்ரீநாத் பக்கம் இருக்காங்க. ஒங்க வழக்கறிஞர் அணி இருந்ததும் எந்த பயனும் இல்லை.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory