» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலம் அருவியில் குளிக்க கட்டணம் ரத்து : வனத்துறை அறிவிப்பு
வெள்ளி 29, மே 2026 12:25:12 PM (IST)
குற்றாலம் அருவியில் ரூ.20 கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில், குற்றாலத்தில் விரைவில் குளுகுளு சீசன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிக்கரைகளில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்றது. இதில் பழைய குற்றால அருவிக்கரையில் மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றது. நிறைவுற்ற பணிகளை சுற்றுலா பயணிகள் பயன்பாட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேற்று தொடங்கி வைத்தார்.
தற்போது பழைய குற்றால அருவியில் தண்ணீர் மிகவும் குறைவான அளவே விழுகிறது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கிடையே பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தலா ரூ.20 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டணம் வசூலிக்கும் முறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அருவியில் தண்ணீர் விழும்போது பழைய நடைமுறைப்படியே கட்டணமின்றி சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)


