» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
வெள்ளி 29, மே 2026 5:48:30 PM (IST)

கல்லிடைக்குறிச்சியில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நேற்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ரஹ்மத் ஜூம்ஆ பள்ளிவாசல் ஈத்கா மைதானத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தலைமை இமாம் எஸ். முகம்மது முஜம்மில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். இமாம் அ. தாஜூத்தின் தொழுகை நடத்தினார். பெருமாள் குத்பா தலைமை இமாம் ஓதீனார்.
இதில், ஜமாத் தலைவர் அ. நாகூர் கனி, நூருல்ஹிதாயாமகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் மு. ரஹ்மத் ரபீக், ஜமாத் செயலர் அ. ஷேக் செய்யது அலி, துணைத் தலைவர் அ. நாகூர் மீரான், பொருளாளர் என். அஜிஸ், தணிக்கையாளர் முகம்மது உசைன் உள்பட ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். தொழுகை முடிந்ததும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இதையடுத்து குர்பானி கொடுக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)


