» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்திரப்பதிவுத் துறையில் புதிய நடைமுறை அறிமுகம்: நேரில் செல்லாமல் இணையவழியில் ஆவணங்கள் பதிவு

ஞாயிறு 7, ஜூன் 2026 8:39:26 PM (IST)



பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், இருந்த இடத்திலிருந்தே இணையவழியில் தங்களது ஆவணங்களைப் பதிவு செய்யும் புதிய நடைமுறையைத் தமிழகப் பத்திரப்பதிவுத் துறை அறிவித்துள்ளது. 

"வருகை இல்லா ஆவணப்பதிவு" என்ற இந்த புதிய முறை விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளதால், அதற்கான விரிவான நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.24 மணி நேரச் சேவை மற்றும் வாட்ஸ்அப்பில் ஆவணம்:இந்தப் புதிய திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்த நேரத்திலும் (24x7x365) இணையதளம் மூலமாகத் தங்களது ஆவணங்களை எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம். 

இணையவழியில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்குச் சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், அவரது மின்னணு கையொப்பத்துடன் (Digital Signature) கூடிய அசல் ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ்அப் (WhatsApp) எண் மற்றும் இணையதள உள்நுழைவு (Login) பக்கத்திற்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

இணையவழிப் பதிவிற்கு முதற்கட்டமாக முதல் விற்பனை மனை, முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள் மற்றும்  வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள் ஆகிய முக்கிய ஆவணங்களுக்கு மட்டுமே சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது:

இச்சேவையைப் பயன்படுத்த ஆவணத்தை எழுதுபவர்கள், பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் அனைவரும் தங்களது அடையாள ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து, உரிய அங்கீகரிக்கப்பட்ட ஆணையத்தின் தளம் மூலமாகக் கைரேகை அல்லது கருவிழிப் படலம் (Iris) வழியாகத் தங்களது பயோமெட்ரிக் சரிபார்ப்பை இணையவழியிலேயே மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் இச்சேவையில் ஏதேனும் தொழில்நுட்பக் குறைபாடுகள் அல்லது உதவிகளைப் பெறத் தேவையான தொடர்பு எண்களும் இந்த அறிவிப்பில் தனியாக வெளியிடப்பட்டுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory