» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: நடத்துநர் அதிரடி கைது!
புதன் 24, ஜூன் 2026 7:48:24 AM (IST)
சாத்தான்குளத்தில் இருந்து நெல்லை நோக்கிச் சென்ற ஓடும் அரசுப் பேருந்தில் இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இப்பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. பேருந்து மூலைக்கரைப்பட்டி அருகே வந்த போது, அதில் பயணம் செய்த 21 வயது இளம் பெண் ஒருவருக்குப் பேருந்து நடத்துநர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் உடனடியாக நடத்துநரை எச்சரித்தார். தொடர்ந்து, பேருந்து மூலைக்கரைப்பட்டியில் வந்து நின்ற போது, அங்கேயே இறங்கிய அப்பெண் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இச்சம்பவம் குறித்து நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த நடத்துநர் கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரைச் சேர்ந்த குமாரசாமி (59) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்து குமாரசாமியைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாட்டி-பேரன் இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளிக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதிப்பு!
திங்கள் 29, ஜூன் 2026 7:56:10 PM (IST)

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
திங்கள் 29, ஜூன் 2026 4:06:11 PM (IST)

பைக்குகள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு: போட்டித் தேர்வு பயிற்சி மையத்திற்குச் சென்றபோது சோகம்!
திங்கள் 29, ஜூன் 2026 8:46:34 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆனித் திருவிழா தேரோட்டம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திங்கள் 29, ஜூன் 2026 8:25:45 AM (IST)

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)



மொபைலில்Jun 29, 2026 - 12:33:55 PM | Posted IP 104.2*****