» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் 2ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 3 வாலிபர்கள் கைது: 2 பைக்குகள் பறிமுதல்!

ஞாயிறு 28, ஜூன் 2026 11:24:08 AM (IST)



தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 2,070 போதை மாத்திரைகளுடன் மூன்று வாலிபர்களைத் தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மதுபானக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு தற்போது மூன்று கடைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. இதனால் மதுபானம் வாங்குவதற்குக் கிலோமீட்டர் கணக்கில் செல்ல வேண்டிய நிலை உள்ளதோடு, கடைகளிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, மதுவிற்கு மாற்றாகப் போதை மாத்திரைகளைப் புழக்கத்தில் விடும் சட்டவிரோதக் கும்பல்கள் அதிகரித்துள்ளன. மாநகரில் போதை மாத்திரைகள் அமோகமாக விற்பனை செய்யப்படுவதாகத் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவிற்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பிரையண்ட் நகர் பகுதியில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு இரண்டு இருசக்கர வாகனங்களில் சந்தேகப்படும்படியாக அமர்ந்திருந்த 3 பேரைப் பிடித்துப் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தங்களது வாகனங்களில் மறைத்து வைத்திருந்த 2,070 போதை மாத்திரைகளைத் தனிப்படையினர் கண்டுபிடித்துப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இளையான்குடியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் அருண் ஜீவா (29), தூத்துக்குடி முனியசாமிபுரத்தைச் சேர்ந்த சுதர்சன் மகன் டிக்சன் (26) மற்றும் செல்வகுமார் மகன் சிவபால கணேஷ் (28) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் மதுரையில் இருந்து மொத்தமாகப் போதை மாத்திரைகளை வாங்கி வந்து தூத்துக்குடியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார், மாத்திரைகள் மற்றும் இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து, இவர்களுக்குப் பின்னணியில் உள்ள முக்கியப் போதைப்பொருள் நெட்வொர்க் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

அன்புJun 29, 2026 - 04:17:07 PM | Posted IP 104.2*****

மதுரைக்காரனை பிடிக்க முடியாது .அதான். .இது கடந்த கால ஆட்சி ..ஆனா இப்போதுமா மதுரைக்காரன ....

நவமணிJun 29, 2026 - 01:20:33 PM | Posted IP 104.2*****

மூன்று பேரையும் பிடித்தது நல்ல காரியம், முகத்தை மறைக்காமல் மூன்று பேரையும் முகத்தை காண்பித்ததும் நல்ல காரியம் இதோடு நிறுத்தாமல் இவர்களோடு தொடர்பு கொண்டுள்ள அந்த நெட்வொர்க்கையை நீங்கள் பிடிக்க வேண்டும் அடுத்ததாக இவர்களுக்கு இந்த மாத்திரைகளை சப்ளை செய்து கொடுத்த கம்பெனிகளை பிடிக்க வேண்டும் அதற்கு அடுத்ததாக இந்த மூன்று பேருடைய பின்னணியில் உள்ள இவர்களுடைய குடும்பத்தார்களை நீங்கள் கொண்டு வர வேண்டும் அவர்கள் எங்களுக்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் அதை எழுதி வாங்கிக்கொண்டு இவர்களுக்கு தகுந்த தண்டனையை கொடுக்க வேண்டும் ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் இவர்கள் குடும்பமும் இந்த செயலுக்கு சம்மதத்தோடு துணை செல்பவர்களாக இருப்பார்கள் அவர்களையும் வெளிப்படுத்த வேண்டும் தன் குடும்பத்தாரையும் இப்படி வெளிப்படுத்துகிறார்களே என்ற ஒரு பயத்தை அவர்களுக்கு நீங்கள் உருவாக்கினால் தான் அடுத்தவர் இந்த தவறை செய்வதற்கு பயப்படுவார் முதலில் 19 வயது வரை ஒருவரை சிறுவர் என்று சொல்வது மிக கேவலமான விஷயமாக நான் கருதுகிறேன் சிறுவர் என்பது 10 வயது வரை தான் 19 வயது வரை ஒருவரை சிறுவர் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாது அன்று மேஜர் ஆகும் பிள்ளைகள் நமது பெண் பிள்ளைகளை 12 முடித்து கல்லூரி செல்லும் போது தான் அவர்கள் மேஜராவார்கள் ஆனால் இன்று ஆறாம் வகுப்பு படிக்கும் போதே அந்த பிள்ளைகள் பெரிய பிள்ளைகளாக ஆகி விடுகிறார்கள் அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நீங்கள் நினைக்கக் கூடாது எப்படி காலம் மிக குறுகியதாக ஓடிக் கொண்டிருக்கிறதோ அப்படியே அவர்களுடைய மன வளர்ச்சி உடல் வளர்ச்சி எல்லாம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது ஆகையால் இந்த 19 வயது வரை உள்ளவரை சிறுவர் என்று கூறுவதை நிறுத்திவிட்டு பத்து வயதுக்கு மேற்பட்டவருக்கு தகுந்த தண்டனை அளித்து அவர்களை தனியாக பள்ளிகள் அமைத்து அதில் வைத்து படிக்க வைக்க வேண்டும் மற்ற கைதிகளோடு அவர்களை வைக்கக் கூடாது இது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி

RanjitJun 29, 2026 - 12:49:21 PM | Posted IP 172.7*****

Kindly also check Roche Park and New harbour road

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory