» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நள்ளிரவில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைப்பு : மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

திங்கள் 29, ஜூன் 2026 4:26:44 PM (IST)

தூத்துக்குடியில் நள்ளிரவில் கார் மற்றும் சரக்கு வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்துச் சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (46). இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் தனது கார் மற்றும் டாடா ஏஸ்  வாகனங்களை வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்தார். அப்போது அந்த வழியே குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், முத்துக்குமாரின் கார் மற்றும் குட்டியானை வாகனத்தின் கண்ணாடிகளை திடீரென அடித்து உடைத்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பியோடினர். 

வாகனங்கள் உடைக்கப்படும் சத்தம் கேட்டு வெளியே வருவதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டனர். இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory