» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காளியம்மன் கோயில் கொடை விழா மாட்டு வண்டி பந்தயம் : 52 ஜோடி மாடுகள் பங்கேற்பு!
சனி 18, ஜூலை 2026 12:11:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராம ஸ்ரீ காளியம்மன் கோயில் ஆனி மாதக் கொடை விழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இப்போட்டியினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். சின்னமாடு மற்றும் பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொத்தம் 52 ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மீனாட்சிபுரம் முதல் குளத்தூர் வரையிலான சாலையில் பந்தயம் நடைபெற்றது. சின்னமாட்டுப் பிரிவிற்குப் போய் வர 6 மைல் தூரமும், பூஞ்சிட்டுப் பிரிவிற்குப் போய் வர 5 மைல் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பில் பரிசுத்தொகை மற்றும் குத்துவிளக்குகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சின்னமாரிமுத்து, தெற்கு ஒன்றியச் செயலாளர் இம்மானுவேல், புதூர் பேரூர் கழகப் பொறுப்பாளர் வெற்றிவேலன், கழக நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)

உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி: தாமிரபரணியை பாதுகாக்க ஆலோசனை - ஆட்சியர் அழைப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 4:38:54 PM (IST)

நெல்லையில் 17ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவிப்பு
செவ்வாய் 14, ஜூலை 2026 11:18:16 AM (IST)

உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆனந்த் மோகன் துவக்கி வைத்தார்!
திங்கள் 13, ஜூலை 2026 12:43:35 PM (IST)


