» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!

திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

chellakumari.jpg

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான நீட் தேர்வை காங்கிரஸ் கட்சித் தொடர்ந்தும் கடுமையாக எதிர்க்கிறது என அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லக்குமார் தூத்துக்குடியில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் விடுத்த அறிக்கையில், தமிழகத்தில் மீண்டும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியை அமைக்க விரும்புவதாகத் தெரிவித்தார். இதற்காகக் காங்கிரஸ் கட்சி சார்பில் 'லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்' என்ற புதிய கொள்கை முழக்கத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

மருத்துவக் கல்லூரி நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி முழுமையாக எதிர்க்கிறது எனத் தெரிவித்த அவர், நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி நிலையங்கள் வினாத்தாள்களை சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருவதாகக் குற்றம் சாட்டினார். இத்தகைய முறைகேடான தேர்வு முறையினால் ஆண்டுதோறும் அனிதா போன்ற பல ஏழை மாணவர்களின் உயிர்களை நாம் இழந்து வருகிறோம் என வேதனை தெரிவித்தார்.

பாதிக்கப்படும் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் கலந்துரையாடியதைச் சுட்டிக்காட்டிய செல்லக்குமார், இந்த நீட் தேர்வு ஒழிப்பை வலியுறுத்தித் தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ் ஏற்பாட்டில் நகரில் பிரம்மாண்ட மினி மரத்தான் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். பேட்டியின் போது இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

அரை வேக்காடு பயலுகJul 21, 2026 - 08:38:17 AM | Posted IP 172.7*****

201 இல் நீட் கொண்டு வந்தது என்னமோ திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் அதை ஏற்றுக்கொள்ளும் மாநிலங்கள் மற்றும் அமல்படுத்தலாம் என்று அப்போதைய ஆட்சியில் சட்டம் கொண்டு வந்தார்கள் அதற்குப் பிறகு நீங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தமிழ்நாட்டில்உள்ளே நுழைந்தது, போங்க அங்குட்டு காமெடி பண்ணிக்கிட்டு..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory