» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பாளை சிறையில் எம்எல்ஏ மார்க்கண்டேயனை நேரில் சந்தித்தார் கனிமொழி எம்பி!
செவ்வாய் 21, ஜூலை 2026 3:45:13 PM (IST)

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனை கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
முதலமைச்சர் விஜய் குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயனைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேரில் சந்தித்துப் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பேச்சு தொடர்பாகத் தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் எம்எல்ஏ ஜி.வி.மார்க்கண்டேயன், நீதிமன்றக் காவலில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு நேரில் சென்ற கனிமொழி எம்பி, சிறையிலுள்ள மார்க்கண்டேயனைச் சந்தித்து வழக்கு விபரங்கள் குறித்துக் கேட்டறிந்தார். இச் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உட்படத் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி கூறியதாவது: "சிறையில் அடைக்கப்பட்டுள்ள விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் நலமாக இருக்கிறார். திமுகவினர் மீது எத்தனை பொய் வழக்குகள் சுமத்தினாலும் அதைச் சட்டரீதியாக எதிர்கொள்ளக் கட்சித் தொண்டர்களும் நிர்வாகிகளும் தயாராகவே உள்ளோம். இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்குத் திமுகவினர் ஒருபோதும் அஞ்ச மாட்டார்கள்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முன்னோடி திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும்: ஆட்சியர் உறுதி!
புதன் 22, ஜூலை 2026 5:11:44 PM (IST)

நெல்லை இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது: காவல்துறை அறிவிப்பு!
செவ்வாய் 21, ஜூலை 2026 4:40:17 PM (IST)

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய பணிகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு நியமனம்
செவ்வாய் 21, ஜூலை 2026 12:05:47 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு!
சனி 18, ஜூலை 2026 5:27:03 PM (IST)

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

கூடங்குளம் அணுமின் நிலையத் தகவல்கள் கசிவுப் புகார்: இந்திய அணுசக்தி கழகம் மறுப்பு!
வியாழன் 16, ஜூலை 2026 3:55:08 PM (IST)



அதுக்குJul 22, 2026 - 11:34:31 AM | Posted IP 172.7*****