» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி - உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 31, ஜூலை 2026 4:37:34 PM (IST)

vaocourtcase.jpg

முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டம், முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப்  பணியாற்றியவர் லூர்து பிரான்சிஸ். தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெற்று வந்த மணல் கொள்ளை குறித்து அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்ததால், கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி தனது அலுவலகத்திலேயே வைத்து கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இக்கொலை வழக்கு தொடர்பாக ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு விசாரணையின் முடிவில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி நீதிமன்றத்தின் தண்டனையை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, கீழமை நீதிமன்றத்தின் ஆயுள் தண்டனைத் தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், இக்கொலை வழக்கில் புலனாய்வு அதிகாரிகள், அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணை நீதிபதி ஆகியோர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு, சம்பவம் நடந்த 5 மாதங்களுக்குள்ளேயே விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளைச் சிறப்பாக நிறைவு செய்ததற்காக நீதிபதிகள் தங்களது பாராட்டைப் பதிவு செய்தனர்.

இதுபோன்ற முக்கியக் குற்றவியல் வழக்குகளில் காலதாமதமின்றி விரைவாக விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள்: காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) மற்றும் வழக்குத் தொடரும் துறையுடன் ஆலோசித்து, காலக்கெடு அடிப்படையிலான திட்டவட்டமான நடைமுறைகளை வகுத்துச் சுற்றறிக்கை வெளியிடத் தமிழகத் தலைமைச் செயலருக்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.

எதிர்காலத்திலும் இதுபோன்ற தீவிர குற்ற வழக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்ற நம்பிக்கையையும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் பதிவு செய்துள்ளது.


மக்கள் கருத்து

PublicAug 1, 2026 - 04:30:58 PM | Posted IP 172.7*****

ஐயா தூக்குத் தண்டனையை உறுதி செய்யுங்கள் ஐயா தூக்குத் தண்டனை உறுதி செய்யுங்கள்

ஒருவன்Aug 1, 2026 - 11:40:15 AM | Posted IP 172.7*****

தூக்குத்தண்டனை கொடுங்கடா, ஆயுத்தண்டனை கொடுத்து கொலை குற்றவாளிகளை சோறு போட்டு வளர்க்கணுமா? கொலை குற்றவாளிகளை தூக்குல தொங்க விட்டால்தான் அடுத்த அடுத்த கொலைகள் நடக்க வாய்ப்பிருக்காது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory