» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியில் திமுகவினர் ரவுடிசம், வசூல் வேட்டை : அமைச்சர் நிர்மல்குமார் கடுமையான குற்றச்சாட்டு!
சனி 1, ஆகஸ்ட் 2026 10:51:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் ரவுடிசம் செய்து வருவதாகவும், தொழில் நிறுவனங்களிடம் கட்டாய வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும், இனிமேல் இந்த நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறும் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், "தூத்துக்குடியில் திமுக, அதிமுக என எந்தக் கட்சி வந்தாலும் மக்களுக்குத் தொந்தரவுதான். திமுக ஆட்சியில் இருந்தபோது கீதா ஜீவனும், அனிதா ராதாகிருஷ்ணனும் பங்குகளைப் பிரித்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடிக்கும் வேலையைப் பார்த்தனர். குவாரிகளை ஆளுக்கொரு பக்கமாகப் பிரித்துக் கொண்டனர்.
தற்போது தவெக ஆட்சியில் தூத்துக்குடியில் இரண்டு அமைச்சர்கள் உள்ள நிலையில், சத்தமில்லாமல் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிர்வாகிகள் அனைவரும் மக்கள் நலத் திட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்திப் பணியாற்றுகிறார்கள். முதல்வர் விஜய் மக்கள் விரும்பக்கூடிய தலைவராகப் பொறுப்பேற்றுச் செயல்படுகிறார்.
தூத்துக்குடியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. அனைத்து நிறுவனங்களிலும் திமுகவினர் குறிப்பிட்ட தொகையை இப்போதும் வசூலித்துக் கொண்டிருக்கிறார்கள். காற்றாலை நிறுவனங்கள் மற்றும் கான்ட்ராக்ட் நிறுவனங்கள் எதிலும் கீதா ஜீவனுக்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.
தூத்துக்குடியைச் சுற்றி 70-க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை சட்டவிரோதமானவை. கல் குவாரிகளிலும் தொடர்ந்து கொள்ளையடித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களுக்குக் கனிம வளங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகளில் தினசரி நடைபெற்ற கனிம வளக் கொள்ளையை முதல்வர் விஜய் அதிரடியாகத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாகத் தூத்துக்குடியில் அனிதா ராதாகிருஷ்ணன் மக்களுக்கு என்ன செய்தார்? தான் ஒரு சாதாரண வியாபாரி எனக் கூறும் அவருக்கு இத்தனை குவாரிகளும், கோடிக்கணக்கான சொத்துக்களும் எப்படி வந்தன? அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் தொடர்ந்து ரவுடிசம் செய்து வருகிறார்கள்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருச்செந்தூரில் நடைபயணம் மேற்கொண்டபோது, அவரால் நடக்க முடியாத சூழலில் பெரியசாமி அவரைத் தூக்கிச் சென்றார் என்பதற்காக இவர்கள் 'முரட்டு பக்தர்கள்' எனக் கூறிக் கொண்டு, மொத்த மாவட்டத்தையுமே அவர்களிடம் தாரை வார்த்துக் கொடுத்து விட்டனர். அண்ணன், தங்கை என இருவரும் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதையும் கொள்ளையடித்துள்ளனர். இனிமேல் இந்த நிலைமை அனைத்தும் முற்றிலும் மாறும் என்றார்.
மக்கள் கருத்து
RajeshAug 1, 2026 - 02:08:07 PM | Posted IP 172.7*****
Athu Kannadi sir😂
பூ .அருணா தேவிAug 1, 2026 - 01:08:23 PM | Posted IP 162.1*****
இருவது குவாரி ஓனர் பெயரை பதிவிடவும் நிர்மல் குமார் அவர்களே
MANIKAMAug 1, 2026 - 11:52:52 AM | Posted IP 104.2*****
கீதா அக்கா ரவுடியிசம் செய்தார்கள் என்று ஒரே ஒரு ஆதாரம் கொடுக்கமுடியுமா? இது ஒரு சட்ட அமைச்சருக்கு அழகா?
ஓட்டு போட்ட முட்டாள்Aug 1, 2026 - 11:47:22 AM | Posted IP 104.2*****
திமுக அதிமுக ஆட்சியில் தான் ஸ்டெர்லைட் சத்தமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது, நாம் தான் ஒண்ணுமே தெரியாமல் திருடர்களுக்கு ஓட்டு போட்டு வளர்த்து விட்டு இருக்கிறோம், இனி அவர்கள் ரவுடிகளை வளர்த்து விடுவார்கள், அவர்கள் எல்லாம் அப்பாவி மக்களை கலவரத்தை தூண்டி விட்டு மாட்டி விட்டு ஓடி விடுவார்கள். திராவிட கட்சிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்.
முன்னாள் தொண்டன்Aug 1, 2026 - 11:36:31 AM | Posted IP 172.7*****
உண்மை, திமுக அதிமுக ஆட்சியில் எல்லா இடத்திலும் லஞ்சம் தான். திமுக அரசியல்வாதிகள் எல்லாம் சொத்து சேர்க்கவே மட்டும் வந்தவர்கள்.
SanjayAug 1, 2026 - 11:14:20 AM | Posted IP 104.2*****
டவுசர் பாண்டி RSSஇன் கைக்கூலியா இருந்துகிட்டு நீ திமுக வின் பத்தி பேசுறதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கிறது முட்டாப் பயலே
Uma magesh. GAug 1, 2026 - 11:07:08 AM | Posted IP 162.1*****
இவனெல்லாம் எப்படி அமைச்சரானன், அரைமெண்டல் மாதிரி உளறிக்கிட்டு இருக்கான்😎
மேலும் தொடரும் செய்திகள்

காரில் 3½ கிலோ கஞ்சா கடத்தல்: சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 3 பேர் கைது!
சனி 1, ஆகஸ்ட் 2026 12:35:50 PM (IST)

தாமிரபரணி - நம்பியாறு இணைப்புத் திட்டம்: நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க சிறப்பு முகாம்
சனி 1, ஆகஸ்ட் 2026 12:10:21 PM (IST)

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி: நெல்லையில் அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
சனி 1, ஆகஸ்ட் 2026 11:55:03 AM (IST)

குற்றாலத்தில் கோலாகலமாகத் தொடங்கியது சாரல் திருவிழா: அமைச்சர்கள் பங்கேற்பு!
வெள்ளி 31, ஜூலை 2026 5:38:49 PM (IST)

காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவிப்பு
வெள்ளி 31, ஜூலை 2026 10:55:45 AM (IST)

பாஜக பெண் கவுன்சிலர் விஷம் குடித்து தற்கொலை: குடும்பத் தகராறில் விபரீதம்!
வெள்ளி 31, ஜூலை 2026 8:30:28 AM (IST)



MANIKAM அவர்களுக்கு இதோ ஆதாரம்Aug 1, 2026 - 03:51:48 PM | Posted IP 172.7*****