» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சனி 1, ஆகஸ்ட் 2026 4:48:13 PM (IST)

ebvehicleTVK.jpg

தூத்துக்குடியில் அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் நேரில் கலந்துகொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்டக் கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்குத் தவெக மத்திய மாவட்டச் செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினார்.

பொதுவாக அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளர் போன்ற களப்பணியாளர்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காகக் கலந்துகொள்வது மட்டுமே நடைமுறையாக இருந்து வருகிறது. இதுவரை தமிழகத்தில் ஆட்சி செய்த எந்தவொரு அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்திலும் அரசுத் துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டதில்லை.

இந்நிலையில், அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் பலர் நேரில் கலந்துகொண்டது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மின்வாரிய நகர மற்றும் ஊரகப் பகுதி செயற்பொறியாளர்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கிய அதிகாரப்பூர்வ கார்களில் அமர்ந்திருந்ததும், ஒருசில அதிகாரிகள் மேடையின் முன்புறம் நின்று கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.

அரசியல் கட்சியின் பொதுக்கூட்டத்தில் முதன்முறையாக மின்வாரிய உயர் அதிகாரிகள் இப்படிப் பட்டவர்த்தனமாகப் பங்கேற்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இச்சம்பவம் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory