» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் : வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 11:33:05 AM (IST)

DrainageMullak.jpg

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் மழைநீர் கால்வாய்களை அரசு பராமரிக்க வேண்டும் என்று வாலிபர சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தூத்துக்குடி மாவட்ட தலைவர்  ஜெ.நேசமணி, மாவட்ட செயலாளர் தினேஷ்குமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி முள்ளக்காடு பகுதிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் மிகவும் அசுத்தமாகவும் அதில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள். இந்த மழை நீர் வடிகாலை சுத்தம் செய்து மாவட்ட நிர்வாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இன்னும் சில மாதங்களில் மழை பெய்யும் நிலையில் இது போல் உள்ள கால்வாய்களை அரசு அதிக கவனம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

சந்திரன்Aug 11, 2026 - 01:40:59 PM | Posted IP 104.2*****

ஏன் நீங்கள் செய்ய வேண்டியது தானே தெண்டமாதானே இருக்கிறீங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory