» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அடகுக் கடையில் நகை திருடிய 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 12, ஆகஸ்ட் 2026 8:03:08 PM (IST)
தூத்துக்குடியில் அடகுக் கடையில் புகுந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடிய வழக்கில் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்துத் தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 தீர்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (47). இவர் தெற்கு சம்மந்தமூர்த்தி தெருவில் ஜூவல்லர்ஸ் மற்றும் அடகுக் கடை' நடத்தி வருகிறார். கடந்த 02.12.2023 அன்று இரவில் இவரது நகைக்கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 66.50 கிராம் தங்க நகைகள் மற்றும் 1,810 கிராம் வெள்ளிப் பொருட்களைத் திருடிச் சென்றனர்.
இது குறித்து சிவசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி மத்திய காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு கணேசபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு (26) மற்றும் மேல சண்முகபுரம் 1-வது தெருவைச் சேர்ந்த மாரியப்பன் (31) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதித்துறை நடுவர் எண்-2 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், இன்று (12.08.2026) நீதித்துறை நடுவர் இலக்கியா தீர்ப்பளித்தார்.
அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட விஷ்ணு மற்றும் மாரியப்பன் ஆகிய இருவருக்கும் 457 ஐபிசி பிரிவில் 3 ஆண்டுகள், 380 ஐபிசி பிரிவில் 3 ஆண்டுகள் என மொத்தம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி அமாவாசை திருவிழா : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 12, ஆகஸ்ட் 2026 4:43:51 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆக.15ல் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு
புதன் 12, ஆகஸ்ட் 2026 3:22:47 PM (IST)

நெல்லையில் பண மோசடி வழக்கு: 2 இளம்பெண்கள் அதிரடி கைது!
புதன் 12, ஆகஸ்ட் 2026 11:37:00 AM (IST)

போதை பழக்கத்திலிருந்து விடுபட பெற்றோருக்குக் கடிதம் எழுதிய மாணவர்கள்: ஆட்சியர் பாராட்டு!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 4:03:00 PM (IST)

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)


