» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ரேஷன் கடைகளில் இணையதளச் சேவை முடக்கம் : பொதுமக்கள் – ஊழியர்கள் இடையே வாக்குவாதம்!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 10:13:05 AM (IST)

ServerDown.jpg

தூத்துக்குடியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகச் 'சர்வர்' மற்றும் இணையதளச் சேவை முடங்கியுள்ளதால், பொதுமக்களுக்கும் கடைப் பணியாளர்களுக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு (ஸ்மார்ட் கார்டு) கைரேகை (பயோமெட்ரிக்) பதிவு செய்யப்பட்டு, இணையவழி மூலமாகவே அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் கடந்த ஒரு வார காலமாக இணையதளச் சேவை (Server Problem) மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

சர்வர் இயங்காததால் ஒரு நாளைக்கு ஒரு கடையில் 2 முதல் 6 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே கைரேகை பதிவு செய்ய முடிவதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.பொருட்கள் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், கைரேகை பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புவதால், கடைப் பணியாளர்களுடன் தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபடும் சூழல் உருவாகியுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் மட்டும் சுமார் 115 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த இணையதள முடக்கப் பிரச்சனைக்குத் தமிழக அரசு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தேவையற்ற மோதல் போக்கு தொடரும் என்றும் நியாயவிலைக் கடைப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

அமேசான்Aug 18, 2026 - 03:02:47 PM | Posted IP 104.2*****

கிளவுட் கம்ப்யூட்டிங் தான் சிறந்தது

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory