» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மழை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு ரூ.5ஆயிரம் கோடி வழங்க வேண்டும் : முதல்வர்
செவ்வாய் 5, டிசம்பர் 2023 11:59:19 AM (IST)

மிக்ஜாம் மழை வெள்ள பாதிப்பு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உடனடியாக ரூ.5ஆயிரம் கோடி நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்தும் அவர்களுக்கான உதவிகளை கேட்டறிந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் பின்னர் சென்னை செய்தியாளர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: வரலாறு காணாத பெருமழையால் மழை நீர் தேங்கி இருந்தது. மழை வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் நேற்று முதலே மீட்பு, நிவாரணப் பணிகள் தொடங்கிவிட்டன.
வராலாறு காணாத மழை வெள்ளத்தை நாம் சந்தித்த போதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது பாதிப்பு குறைவாக உள்ளது. 2015ம் ஆண்டை ஒப்பிடும்போது தற்போது மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு மிக அதிகம். சென்னையில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதும், தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் மற்றும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர்.
ஆனால் தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்க் கூடாது. இதற்காக மிகவும் வருந்துகிறேன். ரூ4,000 கோடி மதிப்பில் ஏற்படுத்திய மழைநீர் வடிகால் பணிகளால்தான் வரலாறு காணாத மழையிலும் பாதிப்புகள் மிக குறைவாக உள்ளன.
மழை, வெள்ள பாதிப்புகளுக்காக மத்திய அரசு ரூ5,000 கோடி உடனடியாக வழங்க வேண்டும் என கேட்டு இன்று கடிதம் அனுப்ப உள்ளோம். நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை மத்திய அரசிடம் இன்று வலியுறுத்துவார்கள். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உரிமம் இன்றி பட்டாசு விற்பனை செய்தால் சட்டப்படி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 5:45:42 PM (IST)

தி.மு.க.வுக்கு தாளம் போடுவர்களுக்கு மட்டுமே அங்கீகாரம்: சபாநாயகருக்கு அன்புமணி கண்டனம்
வியாழன் 16, அக்டோபர் 2025 5:01:13 PM (IST)

கச்சத்தீவு மீட்பு குறித்து இலங்கை பிரதமரிடம் பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:47:15 PM (IST)

வாட்ஸ்அப் ஹேக்கிங் மோசடி குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் : காவல்துறை எச்சரிக்கை!
வியாழன் 16, அக்டோபர் 2025 4:09:26 PM (IST)

கனிமொழி எம்.பி.யின் தாயார் ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 16, அக்டோபர் 2025 3:57:52 PM (IST)

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள்: சட்டப்பேரவையில் பரபரப்பு !
வியாழன் 16, அக்டோபர் 2025 12:21:15 PM (IST)

ஆமாDec 5, 2023 - 01:13:03 PM | Posted IP 162.1*****