» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் டிச. 9ல் கனமழை வாய்ப்பு!

புதன் 6, டிசம்பர் 2023 10:18:07 AM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சனிக்கிழமை (டிச. 9) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியது: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மிக்ஜம் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியான பாபட்லாவுக்கு தெற்கே கரையைக் கடந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் கரையைக் கடக்கத் தொடங்கிய புயல், பிற்பகல் 2.30 மணியளவில் முழுவதுமாக கரையைக் கடந்தது. மேலும் இது வடதிசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.

மிக்ஜம் புயல் காரணமாக திங்கள்கிழமை (டிச. 5) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 14 இடங்களில் அதிபலத்த மழையும், 29 இடங்களில் மிக பலத்த மழையும், 15 இடங்களில் பலத்த மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக பூந்தமல்லியில் 340 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் புதன்கிழமை முதல் திங்கள்கிழமை (டிச. 6-11) வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சனிக்கிழமை (டிச. 9) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோயம்பத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள் நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில் புதன்கிழமை (டிச. 6) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்றார்.


மக்கள் கருத்து

RJtutDec 6, 2023 - 03:47:34 PM | Posted IP 172.7*****

என்னய்யா மானங்கெட்ட கிளைமேட் ஆ இருக்கு

மழையா 😏Dec 6, 2023 - 12:53:05 PM | Posted IP 172.7*****

தூ.டி யில் கன மழையா!, கன வெயில்னு போடுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory