» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு மாதிரிப் பள்ளியில் ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
சனி 10, மே 2025 8:21:06 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகக் கட்டிடத்தில் செயல்பட்டுவரும் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (10.05.2025) செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கினார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தரமான அடிப்படைக் கல்வி முதல், அரசுப்பள்ளி மாணவர்களை இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்வது வரை, பள்ளிக் கல்வித்துறையின் ஒட்டுமொத்த மறுமலர்ச்சியினை ஒற்றை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.
அதிலும் குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமல் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் போக்கவும், அரசுப் பள்ளி மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதை ஊக்கப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்டதற் கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு மாதிரிப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அந்தவகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வல்லநாடு இன்பென்ட் ஜீசஸ் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளிகளில் உண்டு உறைவிட வசதியுடன் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
தூத்துக்குடி அரசு மாதரிப் பள்ளி மாணவர்களுக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் அதாவது, JEE, IIT, NIT, NEET மட்டுமல்லாது NIFT, CUET, CLAT என 41 வகையான நுழைவுத் தேர்வுகள் எழுதுவதற்கு தேவையான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்பட்டதன் விளைவாக கிட்டதட்ட 26 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு எழுதி தேர்வாகிவுள்ளனர். இன்னும் கிட்டதட்ட 40 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவுத் தேர்வு எழுதி வருகின்றனர்.
மேலும், அரசு மாதிரிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பையும், சிறந்த கல்வி நிறுவனங்களில் தொழில்முறை கல்வி பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வாய்ப்பினை உறுதி செய்தலும், சிறப்பு கற்றல் அமைப்பு மூலம் மாணவர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை மெருகேற்றி இணை கல்விச் செயல்களை மேம்படுத்துதலும், ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் திறன், மனோதத்துவ அடிப்படையில் தொழில் வாய்ப்புகளை மேற்கொள்ள தொழில் வழிகாட்டுதலும் இப்பள்ளியின் முக்கிய நோக்கமாகும்.
அரசு மாதிரிப் பள்ளியில் ஒரு வகுப்பு நேரத்தை உயர்கல்வி வழிகாட்டுதல் வகுப்பாக நடத்தப்படுகிறது. இதில் தனித்திறன், கலைத்திறன் மேம்பாடு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் வழங்கப்படுகிறது. அதுமட்டும்மல்லாமல், அரசு மாதிரிப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது ஆரம்ப கால பள்ளிகளுக்கு சென்று அங்கு பயிலும் மாணவர்களுக்கு நாட்டில் உள்ள முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான வழிமுறைகள், அதற்கு எப்படி எல்லாம் தங்களை தயார்படுத்திக்கொண்டு, அதற்கான நுழைவுத் தேர்வு எழுதுவது குறித்து பல்வேறு உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறார்கள்.
இந்த மாதிரிப் பள்ளி உண்டு உறைவிடப்பள்ளி என்பதால் மாணவ, மாணவிகள் தங்கிப் படிக்கும் வகையில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதியும் உள்ளது. மேலும், பள்ளி வளாகத்தில் உட்கட்டமைப்பு வசதிகள், நூலகம், ஸ்மார்ட் வகுப்பறை, கணினி அறை, இயற்பியல் மற்றும் வேதியியல் ஆய்வகம், விடுதிக் கட்டிடம், சமையலறை மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகள் குறித்து செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசுப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்தியாவின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறச் செய்ய வேண்டுமென்ற நோக்கில் அரசின் சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், எடுத்துரைத்து, மாணவ, மாணவியர்கள் மற்றும் செய்தியாளர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.
மேலும், JEE, IIT, NIT, CUET, CLAT உள்ளிட்ட பல்வேறு முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வுகளில் தேர்வாகியுள்ள மாணவர்கள் அரசு மாதிரிப் பள்ளியின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் குறித்தும், ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
அதுபோன்று, மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களும் மாதிரிப் பள்ளியில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்பதனால் உண்டாகும் நன்மைகள் குறித்து உருவக்கமாக எடுத்துரைத்து, அரசுப் பள்ளி மாணவர்களும் சமூகத்தில் ஒரு உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் கல்வித்துறையில் பல்வேறு முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்திவரும் தமிழ்நாடு அரசிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, அரசு மாதிரப் பள்ளி தலைமையாசிரியர் கஜேந்திரபாபு, அசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய சராசரியைவிட தமிழகத்தில் கல்வித் தரம் சிறப்பாக உள்ளது : மாநில திட்டக் குழு தகவல்
சனி 10, மே 2025 5:51:33 PM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

ஆம்புலன்ஸ் பணிகளுக்கு மே 12ல் ஆட்கள் தேர்வு முகாம்: ஆட்சியர் தகவல்
சனி 10, மே 2025 4:47:43 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)
